Pages

Thursday, November 25, 2010

யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க அகழிகள்

சத்தியமங்கலம் வனப்பகுதி கிராமங்களில் யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க அகழிகள் அமைக்கும் பணி வன அதிகாரிகள் பார்வையிட்டனர்

பவானிசாகர், நவ.25-
http://dailythanthi.com/article.asp?NewsID=609448&disdate=11/25/2010&advt=2

சத்தியமங்கலம் வனப்பகுதி கிராமங்களில் யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க அகழிகள் அமைக்கும் பணியை வன அதிகாரிகள் பார்வையிட்டனர்.

அகழியை பார்வையிட்டனர்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனக்கோட்டத்தில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை தலைமை வனப்பாதுகாவலர் சஞ்சய்குமார் ஸ்ரீவஸ்தவா, மற்றும் மண்டல வனப்பாதுகாவலர் து.அருண் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது டி.என்.பாளையம் சரகத்திற்கு உட்பட்ட கொங்கர்பாளையம் பகுதியில் ,தனியார் நிலங்களில் மரம் வளர்த்தல் திட்டத்தின் கீழ் நடவு செய்யப்பட்டுள்ள தோட்டப் பகுதிகள் மற்றும் காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் நுழைந்து சேதம் ஏற்படுத்துவதை தடுக்கும் பொருட்டு, யானைப்பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வெட்டப்பட்ட அகழியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கடன் உதவி

மேலும் தமிழ்நாடு காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் மாற்று வேலைவாய்ப்பினை உருவாக்கும் நோக்கத்தில் 9 கிராமங்களைச் சேர்ந்த பழங்குடியின 85 கிராம வனக்குழு உறுப்பினர்கள் மற்றும் 4 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியின்போது ரூ.9 லட்சத்து 69 ஆயிரத்து 800 கடன் உதவியையும் வன அதிகாரிகள் வழங்கினர்.

நிகழ்ச்சியில் சத்தியமங்கலம் வன மாவட்ட அதிகாரி சதீஸ், வனஅதிகாரி சி.ஹெச்.பத்மா(பயிற்சி) மற்றும் உதவி வனப்பாதுகாவலர் தூ.கோ.அசோக்குமார், (பயிற்சி) ஆகியோர் கலந்து கொண்டனர்.