Pages

Thursday, November 25, 2010

ராஜஸ்தானில் கடுங்குளிர் தாங்காமல் 100 மாடுகள் பலி

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2010,03:10 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=134109

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில்  கடும் பனிகுளிர் தாங்காமல் மாட்டுத்தொழுவத்தில்  கட்டி வைக்கப்பட்டிருந்த 100 மாடுகள், கன்றுகள் இறந்து போயின.ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில் குலாப்பூர் கிராம் உள்ளது. இங்கு விவசாயம் மற்றும் பால் பண்ணைகளுக்காக மாட்டுத்தொழுவம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. மலைப்பகுதியை ஓட்டிய கிராமம் என்பதால் இங்கு இரவு நேரத்தில் கடும் குளரி்ர் காற்று வீசியது. குளிர் தாங்காமல் 100-க்கும் மேற்பட்ட மாடுகள் , கன்றுகள் இற்ந்து போயின். சம்பவம் குறித்து கால்நடைத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,மாடுகளை சரியாக பராமரிக்காமல் போனதே இறப்பிற்கு காரணம் என்றனர். மேலும் மாவட்ட வருவாய் அதிகாரி விசாரித்து இறந்த மாடுகள் பிரேத பரிசோதனைக்காக அரசு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.