Pages

Sunday, November 14, 2010

ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வேப்பூர் வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

வேப்பூர்,நவ.15-
http://dailythanthi.com/article.asp?NewsID=607140&disdate=11/15/2010&advt=2

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வேப்பூர் வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற் பனை செய்யப்ப டது.

வாரச்சந்தை
வேப்பூர் கூட்டுரோட்டில் வாரந்தோறும் வெள்ளிக்கிழ மைகளில் வாரசந்தை நடை பெறுவது வழக்கம். இந்த சந்தையில் ஆத்தூர், தலை வாசல், மடப்பட்டு உள்ளிட்ட இடங்களில் இருந்து வரும் வியாபாரிகள் காய்கறிகள், தானியங்கள், பழவகைகள், இரும்பு சாமான்கள் மற்றும், வெள்ளாடு, செம்பறி ஆடுகள், மாடுகள் மற்றும் பல பொருட்களை விற்பனை செய்வார்கள். இதே போல, வேப்பூர் சுற்றுப்புற கிராமப்புற பகுதியில் உள்ள விவசாயிகள் வளர்க்கும் ஆடுகளை சிறு வியபாரிகள் வாங்கி, அவற்றை வேப்பூர் சந்தையில் விற்று வருகிறார்கள். இந்த ஆடுகள் சென்னை, தேனி, பெங்களூர், ஐதராபாத் ஆகிய ஊர்களுக்கு இறைச்சிக்காக அனுப்பி வைப்பது வழக்கம்.

1500 ஆடுகள்
இந்த நிலையில், வருகிற 17-ந் தேதி முஸ்லிம் மக்கள் கொண் டாடும் பக்ரீத் பண்டிகை வருவதால், அன்றைய தினம் இறைச்சி களை தானமாக வழங்க வேப் பூர் வாரசந்தையில் ஏராள மான ஆடுகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டி ருந்தது. ஆடு களை விற்கும் வியாபாரிகள் எதிர்பார்த்தபடி, ஏராளமான வர்கள் போட்டி, போட்டி கொண்டு அதிக விலை கொடுத்து ஆடுகளை வாங் கினர். கடந்த வெள்ளிக் கிழமை நடந்த வாரசந்தையில் மட்டும் 1,500 ஆடுகள் ரூ.2 கோடிக்கு விற்பனை செய்யப்ப ட்டது. இதில் அதிகபட்சமாக துரைக்கண்ணு என்ற வியாபாரி வைத்திருந்த ஆடு ரூ.13 ஆயிரத்து 500-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்துக்கும் விற்பனை யானது.