மழை வெள்ளத்தில் மிதக்கும் மைசூர் மிருககாட்சி சாலை
நீரில் மூழ்கி மான் சாவு
நீரில் மூழ்கி மான் சாவு
மைசூர், நவ.7-
http://dailythanthi.com/article.asp?NewsID=605253&disdate=11/7/2010&advt=2
மைசூரில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மைசூர் மிருககாட்சி சாலை வெள்ளத்தில் மிதக்கிறது. மழை நீரில் மூழ்கி ஒரு மான் பரிதாபமாக இறந்தது.
தொடர் மழை
மைசூர் பகுதிகளில் கடந்த 1 வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி உள்ளது. சில இடங்களில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயமும் பாதிக்கப்பட்டு உள்ளது.
வெள்ளத்தில் மிதக்கும் மிருககாட்சி சாலை
இந்தநிலையில் மைசூரில் உள்ள உலக புகழ்பெற்ற ஜெயசாம ராஜேந்திர மிருககாட்சி சாலை மழை வெள்ளத்தில் மிதக்கிறது. சிங்கம், புலி, கரடி, பறவைகள், பாம்புகள் உள்ள அறைகளுக்குள்ளும் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் அந்த மிருகங்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. மிருககாட்சி சாலை வளாகம் முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதுடன், ஆங்காங்கே மழை நீர் தேங்கியும் உள்ளது.
மான் சாவு
அங்கு பள்ளமான பகுதிகளில் உள்ள விலங்குகள் கழுத்து அளவு தண்ணீரில் மூழ்கி உள்ளது. இந்த மழை வெள்ளத்தால் ஒரு மான் இறந்தது. மிருக காட்சிசாலையில் இவ்வளவு மழை வெள்ளம் புகுந்தது இதுதான் முதல் முறை என்று கூறப்படுகிறது. மழைநீரை வெளியேற்ற அதிகாரிகள், ஊழியர்கள் முயற்சி செய்து வருகிறார்கள்.