Pages

Tuesday, November 16, 2010

ராஜஸ்தான் ஒட்டகங்கள்

பக்ரீத் குர்பானிக்கு ராஜஸ்தான் ஒட்டகங்கள் : சென்னை வருகை

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2010,23:35 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=125738
 

சென்னை: பக்ரீத் கூட்டு குர்பானிக்காக ராஜஸ்தானிலிருந்து ஒட்டகங்கள் தமிழகத்திற்கு வரத் துவங்கிவிட்டன. சென்னைக்கு 13 ஒட்டகங்கள் வந்துள்ளன.

இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை ஈகை திருநாளாக கொண்டாடி வருகின்றனர். பண்டிகை நாளில் ஏழைகள் வீட்டிலும் மாமிச உணவு உண்ண வேண்டும் என்ற நோக்கத்தில் ஆடு, கோழிக் கறியை பங்கிட்டு ஏழைகளுக்கு கொடுப்பது வழக்கம்; இது "குர்பானி' எனப்படுகிறது. ஆரம்பத்தில் ஆடு, மாடுகளை குர்பானி கொடுத்தவர்கள் தற்போது அரபு நாடுகளைப் போன்று இந்தியாவிலும் ஒட்டகங்களை பலியிட்டு குர்பானி கொடுக்கத் துவங்கிவிட்டனர்.

தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இதுபோன்று ஒட்டகங்கள் குர்பானி கொடுப்பது பிரபலமாகியுள்ளது. பலர் ஒன்று சேர்ந்து, ஒட்டகங்களை வாங்கி பங்கிட்டு தானம் கொடுக்கின்றனர்; இது, "கூட்டு குர்பானி' எனப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் தமிழகம் முழுவதும் 150 ஒட்டகங்கள் குர்பானி கொடுக்கப்பட்டன. இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகை வரும் 17ம் தேதி கொண்டாப்படுகிறது.  இதையொட்டி, ராஜஸ்தானிலிருந்து இப்போதே ஒட்டகங்கள் சென்னைக்கு வரத் துவங்கிவிட்டன. ராஜஸ்தானிலிருந்து ஏராளமான ஒட்டகங்கள் ஆந்திராவுக்கு வந்து சேர்ந்துள்ளன. அங்கிருந்து ஒட்டகங்கள் பல்வேறு இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. சென்னை சைதாப்பேட்டையில் நான்கு, வண்ணாரப்பேட்டையில் ஒன்பது ஒட்டகங்கள் வந்துள்ளன. இதன் விலை ரக வாரியாக 25 ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் வரை உள்ளது.  இன்னும் ஓரிரு நாட்களில் சென்னைக்கு 25க்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் வரும் என என தெரிகிறது. தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் இந்த ஆண்டு குர்பானி கொடுக்கப்படும் என தெரிகிறது.