பதிவு செய்த நாள் 11/23/2010 4:33:26 AM
http://www.dinakaran.com/chennaidetail.aspx?id=21050&id1=9
சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெள்ளைப் புலிகள் இனப் பெருக்கத்தை அதிகரிக்க 1.50 லட்சம் மதிப்பில் 2 பெரிய கூண்டுகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உயிரியல் பூங்கா நிர்வாக இயக்குனர் ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:வண்டலூர் உயிரியல் பூங்காவில் மொத்தம் 7 வெள்ளை புலிகள் உள்ளன. இதற்கு போதுமான கூண்டுகள் இல்லாததால் இனப்பெருக்கம் செய்வதில் சிக்கல் உள்ளது. எனவே 2 பெரிய கூண்டுகள் அமைக்க முடிவு செய்து டெண்டர் விடப்பட உள்ளது. மழைக்காலம் முடிந்ததும் கூண்டு அமைக்கும் பணி தொடங்கப்படும். இதுபோல சிங்கவால் குரங்கு இனப் பெருக்கத்துக்கும் கூடுதல் கூண்டுகள் அமைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க பூங்கா வில் உள்ள குளம், கிணறுகளில் மழைநீர் சேமிப்பு வசதி செய்யப்படுகிறது. இவ்வாறு ரெட்டி கூறினார்.