பக்ரீத் பண்டிகை: குர்பானிக்கு ஒட்டகம் வரவழைப்பு!
சனி 13, நவம்பர் 2010 12:17:06 PM (IST)
http://tutyonline.net/view/32_8697/20101113121706.html
பக்ரீத் பண்டிகையையொட்டி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு 12 ஒட்டகங்கள் அனுப்பி வரவழைக்கப்பட்டுள்ளது.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு குர்பானி கொடுத்து ஏழைகளுக்கு இறைச்சியை தானமாக வழங்க பாளை நகர பகுதிக்கு தமுமுக சார்பில் ஒட்டகம் கொண்டு வரப்பட்டுள்ளது. வரும் 17ம் தேதி முஸ்லிம்களால் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் குர்பானி கொடுப்பதற்காக தமுமுக சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓட்டகங்கள் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு 12 ஒட்டகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியிலிருந்து லாரி மூலம் பாளை மாநகர பகுதிக்கு ஒரு ஒட்டகம் நேற்று கொண்டு வரப்பட்டது. இதை வரும் 17ம் தேதி பக்ரீத் பண்டிகை தினத்தில் குர்பானி கொடுத்து ஏழைகளுக்கு தானமாக இறைச்சி வழங்கப்படும்.
ஒரு ஒட்டகத்தின் விலை 40 ஆயிரம் ரூபாயாகும். 350 கிலோ முதல் 450 கிலோ எடை இருக்கும். முதல் கட்டமாக நெல்லை மாவட்டத்தில் பாளை மற்றும் ஏர்வாடி பகுதிக்கு இரு ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மனித நேய மக்கள் கட்சி மாநகர செயலாளர் பிலால் தெரிவித்தார்.