தொந்தரவு செய்யாதீர் சிங்கவால் குரங்குகளுக்கு இது ஹனிமூன் காலம்
பதிவு செய்த நாள் 11/21/2010 12:33:17 AM
http://dinakaran.com/highdetail.aspx?id=20856&id1=13
வால்பாறை : சிங்கவால் குரங்குகளுக்கு இது ஹனிமூன் காலம் என்பதால் அதை தொந்தரவு செய்யவேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
அரிய வகை விலங்கான சிங்கவால் குரங்கு, கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை, மானாம்பள்ளி, புதுத்தோட்டம், டாப்சிலிப் வனப்பகுதியில் அதிகளவில் உள்ளன. இவற்றின் இனப்பெருக்க காலம் நவம்பர் முதல் பிப்ரவரி வரை. கர்ப்ப காலம் 170 நாள். ஒரு கூட்டத்தில் 14 முதல் 80 குரங்குகள் வரை இருக்கும். இதில் 4 அல்லது 5 ஆண் குரங்குகள் இருக்கும்.
புதுத்தோட்டம் பகுதி, வால்பாறை & பொள்ளாச்சி சாலையில் உள்ளது. சுற்றுலா பயணிகள் வால்பாறைக்கு வரும்போது, இங்கு காணப்படும் சிங்கவால் குரங்குகளுக்கு தின்பண்டங்களை கொடுப்பது வழக்கம். எனவே வாகனங்கள் வரும்போது, இவை அதன் மீது தாவி ஏறுகின்றன. அப்போது பல குரங்குகள் வாகனத்தில் அடிபட்டு இறக்கின்றன. இதை தடுக்க பணியாளர்களை வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் நியமித்துள்ளனர். இது ஹனிமூன் காலம் என்பதால், குரங்குகளுக்கு உணவுப்பண்டங்களை வழங்கக்கூடாது என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.