தாம்பரம்,நவ.30-
http://dailythanthi.com/article.asp?NewsID=610599&disdate=11/30/2010&advt=2
பல்லாவரத்தில் கல்குவாரி குட்டையில் கழிவு நீர் கலந்ததால் குட்டையில் இருந்த ஆயிரக்கணக்காள மீன்கள் செத்து மிதக்கின்றன.
கல்குவாரி குட்டை
சென்னையை அடுத்த பல்லாவரம் நகராட்சி 12-வது வார்டு அருகே கச்சேரிமலையில் கல்குவாரி உள்ளது. இந்த கல்குவாரி குட்டையில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்த குட்டையில் கோடை காலத்திலும் தண்ணீர் வற்றாது என்பதால் அந்த பகுதி பொதுமக்கள் துணி துவைக்க இந்த குட்டையை பயன்படுத்தி வந்தனர்.
இந்த குட்டையில் எப்போதும் தண்ணீர் இருப்பதால் பல்லாயிரக்கணக்கான மீன்கள் இதில் உயிர் வாழ்ந்து வந்தன.
கழிவுநீரால் மீன்கள் சாவு
இந்தநிலையில் குட்டையை சுற்றியுள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் இந்த குட்டையில் கலந்ததால் குட்டையில் உள்ள ஆயிரக்கணக்கான மீன்கள் நேற்று காலை செத்து மிதந்தன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதனைத்தொடர்ந்து பல்லாவரம் நகராட்சி சுகாதாரத்துறையினர் குட்டையில் செத்து மிதந்த மீன்களை அகற்றினர்.
குட்டையில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.