பெ.நா.பாளையம் : துடியலூர் அருகே நஞ்சுண்டாபுரம் மலை அடிவாரத்தில் பிறந்து பத்து நாட்களே ஆன பெண் குட்டி யானை இறந்தது.
பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2010,20:51 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=124997
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் காட்டு யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மலையோர கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு, வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களை தேடி காட்டு யானைகள் தினசரி இரவு முற்றுகையிடுகிறது. யானைகளை விரட்ட வனத்துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு போதுமான பலன் இல்லை. கடந்த 3 ஆண்டுகளில் இப்பகுதியில் சுற்றித்திரியும் யானைகளின் எண்ணிக்கை ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக துடியலூர் நஞ்சுண்டாபுரம் அருகே பொன்னூத்து மலை அடிவாரத்தில் உள்ள மரங்கள் அடர்ந்த பகுதியில் யானைகள் தனது குட்டிகளுடன் நிற்பது வாடிக்கையாக உள்ளது. கடந்த 10ம் தேதி மதியம் பொன்னூத்து மலை அடிவாரத்தில் யானைகளின் பிளிறல் ஓசை அதிகமாக இருந்தது. கிராமமக்கள் சென்று பார்த்தபோது, பிறந்து 10 நாட்களே ஆன பெண் யானைக்குட்டிஇறந்து கிடந்தது.
அருகில் சென்ற மக் களை சுற்றி நின்ற காட்டு யானைகள் விரட் டின. இது குறித்து பெரியநாயக் கன்பாளையம் வனத் துறை ரேஞ்சர் பன்னீர்செல்வத் துக்கு தகவல் தெரிவித்தனர். நேற்று முன்தினம் காலை மலை அடிவாரத்தில் இறந்த குட்டி யானையின் உடல் பரிசோதனை நடந்தது.
இதுகுறித்து வனத்துறை கால்நடை மருத்துவ அலுவலர் டாக்டர் மனோகரன் கூறுகையில், ""குட்டி யானை யின் தொப்புள்கொடி இன்னும் விழவில்லை. ""பிறந்து 10 நாட்கள் ஆகியிருக்கலாம். குட்டி யானை பாறைகள் நிறைந்த பகுதியில் செல்லும் போது தவறி விழுந்து அதன் முகம், கால் ஆகியவற்றில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்டு யானை இறந்துள்ளது,'' என்றார்.