10 ஆண்டுகளுக்கு பிறகு தண்டேலிக்கு வந்த `ஹார்ன்பில்' பறவைகள்
கார்வார், நவ.29-
http://dailythanthi.com/article.asp?NewsID=610199&disdate=11/29/2010&advt=2
10 ஆண்டுகளுக்கு பிறகு அபூர்வ வகை பறவையான ஹார்ன்பில் பறவைகள் தண்டேலிக்கு வந்து உள்ளன.
தண்டேலியில் ஹார்ன்பில்
இந்தியாவில் காணப்படும் அரிய வகை பறவைகளில் `கிரேட் இந்தியன் ஹார்ன்பில்' எனப்படும் பறவையும் ஒன்று. இந்த வகை பறவை கார்வார் மாவட்டம் தண்டேலி நகருக்கு வந்து உள்ளது. அங்குள்ள ஒரு மரக்கடைக்கு அருகில் கடந்த வாரம் 5 ஹார்ன்பில் பறவைகள் தென்பட்டு உள்ளன. அவை பழங்கள் கிடைக்குமா என்று தேடி வந்து இருக்கின்றன.
சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஹார்ன்பில் பறவைகள் தண்டெலிக்கு வந்து உள்ளதாக பறவைகள் ஆராய்ச்சியாயர் சசிதர் கூறுகிறார். மேலும் அவர் கூறியதாவது:-
அஞ்சக்கூடியது
கிரேட் இந்தியன் ஹார்ன்பில் பறவைகள், கூட்டத்தை பார்த்து அஞ்சக்கூடியது. அவை எப்போதும் மக்களிடம் இருந்து விலகியே இருக்கும். இவற்றில், கறுப்பு மலபார் ஹார்ன்பில், வெள்ளை மலபார் ஹார்ன்பில் என்பன உள்பட பல்வேறு வகைகள் உள்ளன.
கிரேட் இந்தியன் ஹார்ன்பில் பறவையின் கழுத்தை சுற்றிலும் மஞ்சள் நிற பட்டை இருக்கும். இதுவே மற்ற எல்லா ஹார்ன்பில் பறவைகளை காட்டிலும் அழகானது. இவ்வாறு அவர் கூறினார்