Pages

Thursday, November 11, 2010

கிராமத்தில் வெள்ளம் புகுந்து ஆடு, மாடுகளை இழுத்து சென்றது


நம்பிïர் பகுதியில் பலத்த மழை ஏரி-குளங்கள் உடைந்து கிராமத்தில் வெள்ளம் புகுந்தது ஆடு, மாடுகளை வெள்ளம் இழுத்து சென்றது

நம்பிïர், நவ.12-

நம்பிïர் பகுதியில் நேற்று பெய்த பலத்த மழையில் ஏரி-குளங்கள் உடைந்து கிராமத்தில் வெள்ளம் புகுந்து ஆடு-மாடுகளை இழுத்துச்சென்றது.

இடைவிடாமல் மழை
ஈரோடு மாவட்டம் நம்பிïரில் நேற்று காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பகல் 12 மணி முதல் மதியம் 11/2 மணி வரை பலத்த மழை பெய்தது. அதன் பிறகு இடைவிடாமல் மழை தூறிக்கொண்டே இருந்தது.
நம்பிïர் அருகே உள்ள கரட்டுப்பாளையம், குருமந்தூர், ஆயிபாளையம் பகுதிகளிலும் பகல் 12 மணிக்கு மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது.

வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
இதனால் இந்த கிராமங்களில் உள்ள குளங்கள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மழை வெள்ளம் காட்டாறு போல கிராமங்களுக்குள் புகுந்தது. சுமார் 6 அடி உயரத்துக்கு காட்டாறாக பாய்ந்து வந்த வெள்ளம் ஆயிபாளையம் ஆதிதிராவிடர் காலனியில் உள்ள வீடுகளை சூழ்ந்தது.

இதனால் அந்த பகுதி பொதுமக்கள் திகைத்துப்போய் நின்றனர். ஆனால் பொங்கி பிரவாகம் எடுத்து வந்த வெள்ளம் அங்கு கட்டப்பட்டு இருந்த ஒரு பசுமாடு, 2 கன்றுக்குட்டிகள், 4 ஆடுகளை அடித்துச்சென்றது. செய்வது அறியாது திகைத்த அந்த கிராமத்து மக்கள் பெரியவர்களையும், குழந்தைகளையும் மீட்டு பத்திரமாக அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் தஞ்சம் அடைந்தனர்.

காட்டாற்று வெள்ளத்தில் 30-க்கும் மேற்பட்ட குடிசைகளுக்குள் இருந்த நெல் மூட்டைகள் மற்றும் பொருட்களும் அடித்துச்செல்லப்பட்டன. கொட்டித்தீர்த்த மழை கொஞ்சம் விட்டாலும், சுமார் 5 மணி நேரம் வெள்ளத்தில் மக்கள் தத்தளித்தனர். மாலை 5 மணி அளவில் வெள்ளம் மெதுவாக வடியத்தொடங்கியது.

குளத்தில் உடைப்பு
காரப்பாடி கிராமத்தில் 4 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள குளம் நிரம்பி வழிந்தது. நேற்று முன்தினம் காலனி பகுதியில் குட்டையின் கரையில் உடைப்பு ஏற்பட்டு குட்டையில் இருந்த தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறி ஓடியது.

குளத்தில் இருந்து வெளியேறிய தண்ணீர் குட்டையின் அருகில் அமைக்கப்பட்டு இருந்த 4 வீடுகளுக்குள் புகுந்தது. அந்த வீடுகளில் குடியிருக்கும் ஆண்களும், பெண்களும், குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு பாதுகாப்பான இடத்துக்கு ஓடிச்சென்று உயிர் தப்பினார்கள்.

தொடர்ந்து தண்ணீர் வேகமாக பாய்ந்து சென்று அருகில் உள்ள பெரியகுளத்தை சென்றடைந்தது. குட்டையில் உடைப்பு ஏற்பட்டு அதில் இருந்த தண்ணீர் வெளியேறிவிட்டதால் குளத்தில் நீர்மட்டம் 10 அடியில் இருந்து 5 அடி ஆக குறைந்து விட்டது.

கரட்டுப்பாளையம் ஊராட்சித் தலைவர் ராமசாமி நமது நிருபரிடம் பேசுகையில், குளத்தில் ஏற்பட்ட உடைப்பு விரைவில் சீரமைக்கப்படும் என்றார்.

கொடுமுடி
கொடுமுடி, சிவகிரி ஆகிய இடங்களிலும் நேற்று பலத்தமழை பெய்தது. மேலும் ஈரோடு மாவட்டம் முழுவதும் பரவலாக பகல் முழுவதும் மழை தூறிக்கொண்டே இருந்தது. கொடுமுடியில் நேற்று காலை முதல் வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. பகல் 11 மணி முதல் மதியம் 11/2 மணி வரை தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் ரோடுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

ஊஞ்சலூரில் காலை 9 மணிக்கு மழை தூறத்தொடங்கியது. 10 மணி முதல் மதியம் 11/2 மணி வரை 31/2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. அதன் பிறகும் தொடர்ந்து மழை தூறிக்கொண்டே இருந்தது.

புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டியில் காலை முதல் தொடர்ந்து பகல் முழுவதும் இடைவிடாமல் மழை தூறிக்கொண்டு இருந்தது. குளிர்ந்த காற்றும் வீசியது.

சிவகிரி
சிவகிரி கந்தசாமிபாளையம், வேட்டுவபாளையம், நம்மகவுண்டன்பாளையம், எல்லபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை தொடர்ந்து 5 மணி நேரம் பலத்த மழை பெய்தது.

மொடக்குறிச்சி
மொடக்குறிச்சி, அறச்சலூர், பூந்துறை, கணபதிபாளையம், எழுமாத்தூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் இடைவிடாமல் தொடர்ந்து மழை தூறிக்கொண்டே இருந்தது.

அம்மாபேட்டை
குருவரெட்டிïர், பூதப்பாடி, பூனாச்சி ஆகிய பகுதிகளில் நேற்று மதியம் 1 மணி முதல் பலத்த மழை பெய்தது. அம்மாபேட்டையில் மதியம் 2 மணி அளவில் சிறிதுநேரம் மழை பெய்தது.

சத்தியமங்கலத்தில் காலை முதல் விட்டு விட்டு மழை தூறிக்கொண்டு இருந்தது. பவானிசாகரில் பகல் 111/2 மணி முதல் மழை தொடர்ந்து தூறிக்கொண்ட இருந்தது.