Pages

Saturday, November 6, 2010

மான் வேட்டையாடிய தொழிலாளி கைது

சத்தியமங்கலம் வனப்பகுதியில் மான் வேட்டையாடிய தொழிலாளி கைது 15 கிலோ இறைச்சி பறிமுதல்

பவானிசாகர், நவ.7-
http://dailythanthi.com/article.asp?NewsID=605391&disdate=11/7/2010&advt=2

சத்தியமங்கலம் வனப்பகுதியில் மானை வேட்டையாடிய தொழிலாளியை வனத்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்த 15 கிலோ இறைச்சியும் பறிமுதல் செய்யப்பட்டது.

ரோந்து
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் சிலர் மான்களை வேட்டையாடுவதாக சத்தியமங்கம் வன மாவட்ட அதிகாரி சதீசுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவருடைய உத்தரவின் பேரில் வன அதிகாரி(பயிற்சி) பத்மா தலைமையில் வனவர் ராஜேந்திரன், வனக்காவலர் முருகன் ஆகியோர் சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் வனபகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் வடவள்ளி வேடன் காலனியைச் சேர்ந்த அருணன் (வயது 68) என்ற தொழிலாளி அவருடைய வீட்டில் மான் இறைச்சியை விற்பனை செய்து கொண்டு இருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

மான் வேட்டை
இதைத்தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் அருணன் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு ஒரு பையில் மான் தலை மற்றும் இறைச்சி இருந்தது. அதன் அருகில் இருந்த அடுப்பில் இறைச்சி வேக வைக்கப்பட்டு கொண்டு இருந்தது. அதனால் வனத்துறை அதிகாரிகள் அருணனை கைது செய்தனர். அவரிடம் இருந்த 15 கிலோ மான் கறியையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் அருணனிடம் விசாரணை நடத்திய போது, அவர் சத்தியமங்கலம் வனப்பகுதியில் வலை விரித்து, அதில் சிக்கிய மானை பிடித்து இறைச்சிக்காக பயன்படுத்தியது தெரியவந்தது.இவர் இது போன்று வேறு இடங்களில் மானை வேட்டையாடி உள்ளாரா? என்பது குறித்தும் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.