Pages

Saturday, November 13, 2010

வனவிலங்குகள் தாகம் தீர்க்க நீர் தேக்கங்கள்

தாணிப்பாறை காட்டுப்பகுதியில் வனவிலங்குகள் தாகம் தீர்க்க நீர் தேக்கங்கள் 4 இடங்களில் அமைக்கப்பட்டன

பேரைïர், நவ.13-
http://dailythanthi.com/article.asp?NewsID=606800&disdate=11/13/2010&advt=2

மேற்குத்தொடர்ச்சி மலை தாணிப்பாறை காட்டுப்பகுதியில் வனவிலங்குகள் தாகம் தீர்க்க 4 இடங்களில் நீர் தேக்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வனப்பகுதி
மதுரை மாவட்டம், பேரைïர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தாணிப்பாறை வனப்பகுதி உள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டு,சாப்டூர் வனத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அரிய வகை சாம்பல் நிற அணில், யானைகள், கரடிகள், புள்ளிமான், காட்டுமாடுகள், போன்ற விலங்கினங்கள் இந்த வனப்பகுதியில் வசிக்கின்றன. வனப்பகுதியை ஒட்டி ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன.

விளைநிலங்கள் சேதம்
இந்த விளைநிலங்களில் கரும்பு, தென்னை, நெல்பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. கோடை காலத்தில் காட்டுப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் போது விலங்கினங்கள் தாகம் தீர்க்க விளைநிலங்களுக்கு புகுந்து விடுகின்றன.

காட்டுமாடுகள், யானைகள் உள்ளிட்ட விலங்குகள் அடிக்கடி புகுந்து சேதப்படுத்துவதால் இந்த பகுதி விவசாயிகள் பெரும் அவதியடைந்தனர். தாகத்திற்கு தண்ணீர் தேடி விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறுவதை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுத்தது.

நீர் தேக்கங்கள்
அதன்படி, விருதுநகர் மண்டல வன பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் மற்றும் வன உயிரின காப்பாளர் ராஜு, ஆகியோர் அறிவுரையின்படி சாத்தூர் வனச்சரகர் கருமலையான் தலைமையில் தாணிப்பாறை, செவிட்டு கிழவன் கோவில், ஆலமரத்து ஓடை, பாப்பநத்தான் கோவில் ஓடை ஆகிய 4 இடங்களில் நீர் தேக்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தலா ரூ.5 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த நீர்பிடி முகடுகளில் மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் தேங்கி நிற்கும். கோடை காலத்திலும் தண்ணீர் தேங்கும் விதத்தில் இந்த முகடுகள் அமைக்கப்பட்டுள்ளன.இதில் தாகம் தீர்த்துக்கொள்வதால், விலங்குகள் விளைநிலங்களுக்கு வருவது தடுக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதன்மூலம் அடிவார பகுதியில் விவசாயம் செய்யும் விவசாயிகள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.