Pages

Tuesday, November 2, 2010

தெரு மாடுகளை பட்டியில் அடைத்தனர் போக்குவரத்து போலீசார்

போக்குவரத்து போலீசார் நடவடிக்கை தெருக்களில் சுற்றித்திரிந்த மாடுகளை பட்டியில் அடைத்தனர்

புதுச்சேரி, நவ.2-
http://dailythanthi.com/article.asp?NewsID=604576&disdate=11/2/2010&advt=2

புதுச்சேரியில் தெருக்களில் சுற்றித்திரிந்த மாடுகளை போக்குவரத்து போலீசார் பிடித்து பட்டியில் அடைத்தனர்.

தெரு மாடுகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜவுளிகள், பட்டாசு மற்றும் மளிகை பொருட்களை வாங்க நேருவீதி, ரங்கப்பிள்ளை வீதி, புஸ்சி வீதி உள்பட நகரின் முக்கியமான இடங்களில் மக்கள் கூட்டம் வீதிகளில் அலைமோதுகிறது.

இந்த நிலையில் அந்த பகுதிகளில் தெருக்களில் திரியும் மாடுகளால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. இது தொடர்பாக பொதுமக்கள் போக்குவரத்து போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.

பட்டியில் அடைத்தனர்

இதனை தொடர்ந்து போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு பழனிவேலு உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் காயிதே ஆசாம், நகராட்சி ஆணையர் அசோகன், மருத்துவ அதிகாரி காந்திமதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலைகளில் போக்குவரத்து இடைïராக திரிந்து கொண்டு இருந்த 10 மாடுகளை பிடித்தனர். பின்னர் அதனை நகராட்சிக்கு சொந்தமான பட்டியில் அடைத்தனர்.