சென்டிரல் ஆர்.பி.எப். போலீஸ் நிலையத்தில் 31/2 அடி நீள மண்ணுளி பாம்பு பிடிபட்டது
சென்னை, நவ.11-
http://dailythanthi.com/article.asp?NewsID=606320&disdate=11/11/2010&advt=2
சென்னை சென்டிரல் மூர்மார்க்கெட் ரெயில் நிலையம் எதிரே, ரெயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்.) போலீஸ் நிலையம் உள்ளது. இந்த போலீஸ் நிலையத்தை சுற்றி பல்வேறு வகையான செடிகள் வைக்கப்பட்டுள்ளன.
நேற்று காலை 10 மணி அளவில், போலீஸ் நிலையத்திற்கு பின்புறம் வைக்கப்பட்டுள்ள செடிகளுக்கு இடையே மண்ணுளி பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதைப்பார்த்த போலீஸ்காரர் கருப்பசாமி, அதை லாவகமாக பிடித்து கோணிப்பையில் கட்டிவைத்தார்.
பின்னர், மண்ணுளி பாம்பு பிடிக்கப்பட்ட தகவல், வேளச்சேரியில் உள்ள வனச்சரகர் அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து வந்த வன ஊழியர் அந்த மண்ணுளி பாம்பை கோணிப்பையில் கட்டி தூக்கி சென்றார். சுமார் 31/2 அடி நீளமுள்ள இந்த மண்ணுளி பாம்பு வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்கப்படுகிறது.
போக்குவரத்து அதிகம் நிறைந்த சென்டிரல் ரெயில் நிலைய பகுதியில் மண்ணுளி பாம்பு எப்படி வந்தது என்பது எல்லோருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், அதிகம் விலைபோகும் மண்ணுளி பாம்பை யாராவது கடத்தி செல்ல முயன்று, போலீசுக்கு பயந்து வீசிக் சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.