பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2010,20:43 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=120408
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=120408
வேதாரண்யம்: நாகை வனப்பாதுகாவலர் சவுந்தரபாண்டியன் மேற்பார்வையில் வேதாரண்யம் அடுத்த தாணிக்கோட்டகம் பகுதியில் கோடியக்கரை வனச்சரக அலுவலர் கண்ணன், வனவர் ஹாஜாமைதீன் ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது, தாணிக்கோட்டகத்தில் செல்லையன் மகன் பாலசுப்பிரமணியன் என்ற பக்கிரி அபூர்வ ரக பறவைகளான கொக்கு, மடையான் போன்ற பறவைகளை வேட்டையாடுவதை கண்டனர். அவரை உடன் வனத்துறையினர் கைது செய்து ஆறாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.