Pages

Monday, November 29, 2010

தனியாரிடமிருந்த 31 பாம்புகள் பறிமுதல்


ஈரோடு மாவட்ட வனப்பகுதியில் பிடித்து பதுக்கி வைத்திருந்த 31 பாம்புகள் பறிமுதல் 3 பேர் கைது


பவானிசாகர், நவ.30-
http://dailythanthi.com/article.asp?NewsID=610540&disdate=11/30/2010&advt=2


ஈரோடு மாவட்ட வனப்பகுதிகளில் 31 பாம்புகளை பிடித்து பதுக்கி வைத்திருந்த 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.


தீவிர கண்காணிப்பு


ஈரோடு மாவட்டம் முழுவதும் வனப்பகுதியில் சிலர் பாம்புகளை பிடித்து பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. பாம்புகளை பிடித்து வைத்திருப்பவர்களை கைது செயயும் மண்டல வனப்பாதுகாவலர் அருண் உத்தரவிட்டார்.


இதைத்தொடர்ந்து பாம்புகளை பதுக்கிவைத்திருந்தவர்களை பிடிக்க வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாவட்ட வனஅதிகாரி (சத்தியமங்கலம்) சதீஷ் தலைமையில் சத்தியமங்கலம் வன அதிகாரி பத்மா, மற்றும் அசோக்குமார் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படையினர் கோபி, சத்தியமங்கலம், மற்றும் சுற்றுப்பகுதியில் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர்.


31 பாம்புகள் பிடிபட்டன


அப்போது வனத்துறையினரின் சந்தேக வலையில் சிக்கிய ஈரோட்டை சேர்ந்த கபூர் (வயது 32), யுவராஜ் (27) மற்றும் கோபியை சேர்ந்த ஜெகன்குமார் (28), ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இந்த 3 பேரும் பாம்புகளை பிடித்து விற்பனை செய்வது தெரியவந்தது.


இந்த 3 பேரும் ஈரோடு மாவட்ட வனப்பகுதிகளில் இருந்து 6 மாலைப்பாம்புகள், 12 நாகப்பாம்புகள், ஒரு வில்லரணை என்ற விஷப்பாம்பு உள்பட 31 பாம்புகளை பிடித்து வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.


மாலைப்பாம்பு அழிந்து வரும் உயிரின பட்டியலில் இருப்பதால் அவற்றை பிடித்து வைத்திருந்ததால் அவர்கள் 3 பேரும் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.


பறிமுதல் செய்யப்பட்ட பாம்புகளை ஈரோடு மண்டல வனப்பாதுகாவலர் அருண் முன்னிலையில் பண்ணாரி வனப்பகுதியில் விடப்பட்டது.


இதுகுறித்து மண்டல வனப்பாதுகாவலர் கூறும்போது, "வன விலங்குகளை பிடித்தாலோ, அல்லது அவற்றை துன்புறுத்தினாலோ. வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறினார்.