Pages

Sunday, November 7, 2010

காஷ்மீருக்கு வந்த 3 இலட்சம் வெளிநாட்டு பறவைகள்

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2010,04:27 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=122317

ஸ்ரீநகர்:காஷ்மீரில் குளிர்கால சீசனை முன்னிட்டு சைபீரியா, மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல்வேறு ரக வெளிநாட்டு பறவைகள் இடம்பெயர்ந்து காஷ்மீருக்கு வந்துள்ளன. இவ்வாறு வந்துள்ள வெளிநாட்டு பறவைகளின் எண்ணிக்கை 3 இலட்சத்துக்கும் அதிகமாக இருக்கிறது. இது ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இவ்வாறு வந்த பறவைகள் நவம்பர் மாதம் இறுதிவரை இங்கே இருக்கும் பின்னர் திரும்பிவிடும்.