Pages

Saturday, October 23, 2010

தேசிய விலங்கு யானை

தேசிய விலங்கு யானை : வனத்துறை அறிவிப்பு

 பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2010,23:38 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=111884

புதுடில்லி : யானையை தேசிய பாரம்பரிய விலங்காக மத்திய வனத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்திய கலாசார வரலாற்றையும், யானையையும் பிரித்துப் பார்க்க முடியாது. நம்நாட்டு பாரம்பரியத்தோடு ஒன்றி விட்ட இந்த விலங்கு சமீபகாலமாக அழிந்து வருகிறது. நாடு முழுவதும் 25 ஆயிரம் யானைகள் உள்ளன. யானைகளை பாதுகாக்க, இதை தேசிய பாரம்பரிய விலங்காக அறிவிக்க வேண்டும், என்ற கோரிக்கை வலுத்தது.

புலிகளை பாதுகாக்க சட்டரீதியான அமைப்பு இருப்பது போல யானைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என யானைகள் பாதுகாப்பு குழு, கடந்த ஆகஸ்ட் மாதம் தேசிய வனவிலங்கு வாரியத்திடம் தங்கள் பரிந்துரையை சமர்ப்பித்தது. இந்த பரிந்துரையை தேசிய வனவிலங்கு வாரியம் அங்கீகரித்ததால், யானையை தேசிய பாரம்பரிய விலங்காக அறிவித்து மத்திய வனத்துறை அமைச்சகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது