பழனி அருகே பொருளூர் பகுதியில் கால்நடைகள், பறவைகள் தண்ணீர் அருந்த அமைக்கப்பட்ட கிணறு, தொட்டி, பந்தல்கள் 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை
பழனி, அக்.31-
http://dailythanthi.com/article.asp?NewsID=604004&disdate=10/31/2010&advt=2
பழனி அருகே பொருளூர் பகுதியில் கி.பி.17-ம் நூற் றாண்டில் கால்நடைகள் மற்றும் பறவைகள் நீர் அருந்த அமைக்கப்பட்ட கிணறுகள், தொட்டிகள், பந்தல்கள் குறித்த வியப்பான தகவல்கள் கிடைத்துள்ளன.
ஆய்வு
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த மானூர் அரசு உயர்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் நந்திவர்மன், தொப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியர் திருமுருகன் மற்றும் மாணவர்கள் பழனி-கள்ளி மந்தையம் சாலையில் உள்ள பொருளூர் அருகே ஆய்வு நடத்தினர்.
அப்போது கி.பி. 17-ம் நூற் றாண்டில் கால்நடைகள், பறவைகள் தண்ணீர் அருந்த அமைக்கப்பட்ட கிணறுகள், தொட்டிகள், கல் பந்தல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவை கி.பி. 1,772-ம் ஆண்டில் அமைக்கப்பட்டவை ஆகும்.
பொருளூர் அருகில் உள்ள தீர்த்தாக்கவுண்டன் வலசில் பெரு நிலக்கிழாராக வாழ்ந்த திம்ம நாயக்கன் என்பவருக்கு குழந்தைப் பாக்கியம் இல்லை. இதனால் தர்மகாரியங்கள் செய்ய எண்ணி தீர்த்தாக் கவுண்டன் வலசு, பொருளூர், அப்பியம்பட்டி ஆகிய 3 ஊர்களில் கால்நடைகள், விலங் குகள் தண்ணீர் அருந்த 3 கிணறுகளும், கல்லால் அமைக்கப்பட்ட 4 தொட்டிகளும் அமைத்துள்ளார்.
ஆடுகள் நீர் அருந்தும் தொட்டி
பொருளூரில் காணப்படும் 2 தொட்டிகளில் ஒன்று மிகப் பெரிய அளவில் அமைந்துள்ளது. நான்கு கற்களால் அடித்து சேர்க்கப்பட்டுள்ளது. தண்ணீர் வெளியேறாத வண்ணம் சுண்ணாம்பு, முட்டை, கடுக்காய் ஆகியவற்றின் கலவையால் நான்கு பக்கமும் பூசப்பட்டுள்ளது.
ஆடுகள் நீர் அருந்தும் தொட்டியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மண்ணில் புதைந்து கிடந்த இத்தொட்டியை தமிழ் ஆசிரியர்கள் நந்திவர் மன், திருமுருகன் மற்றும் மாணவர்கள் தோண்டி வெளி யில் எடுத்தனர்.
காடுகளில் மேய்ந்து விட்டு வரும் கால்நடைகளின் உடலில் உண்ணிகள், கொசுக்கள், முட்கள் போன்றவை இருக்கும். இதனால் உடலில் ஏற்படும் அரிப்பை போக்குவதற்கு கால்நடைகள் கற்களின் மீது உரசுவது வழக்கம். எனவே தண்ணீர் தொட்டிகள் அருகில் கால்நடைகள் தங்களது உட லை உராய்வதற்கு 2 மீட்டர் உயரமுடைய கல்லும் நடப்பட் டுள்ளது.
பறவைகள்
இதுதவிர பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வைப்பதற்கு கல் பந்தல்களும் அமைக்கப்பட்டுள்ளன. கற்களில் 12 இடங்களில் குழிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நீர் நிலைகளை அழிப் பவர்களுக்கும், தனதாக்கிக் கொள்ள நினைப்பவர்களுக்கும் சாபங்கள் கூறப்பட்டுள்ளன. இந்த செய்திகள் கல் பந்தலில் பொறிக்கப்பட்டுள்ளன. கி.பி.1,772-ம் ஆண்டு (பிர சொபதி தமிழ் வருடம்) அமைக்கப்பட்டுள்ளது.
நீர் நிலைகளை அழிப்பவர்கள் கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற சாபம், மாதா, குருவை நிந்தித்த தோஷத் திற்கு ஆளாவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தர்ம காரியங்களுக்கு துணை நிற்பவர்கள் மாவலி அரசன் பெற்ற சாபலம் பெறுவார்கள் என்றும், அவர்களது பாதம் என் தலை மேல் என்றும் திம்ம நாயக்கர் குறிப்பிட்டுள்ளார்.
கோரிக்கை
சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்னரே கால்நடைகள், பறவைகள் மீது அன்பு கொண்டு அவை நீர் அருந்த தொட்டிகள், கிணறுகள் அமைக்கப்பட் டுள்ளது வியக்கத்தக்க செய்தியாகும். பொருளூர் பகுதியில் அமைந்துள்ள இத் தொட்டிகள், கிணறுகள், பந்தல்கள் அரிய பொக்கிஷம் ஆகும். இவை தற்போது பராமரிப்பின்றி கிடக்கின்றன. எனவே இவற்றை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த இடத்தில் இருந்து கல் தூண்களையும், கல்பலகைகளையும் எடுத்துச் சென்றவர்கள் இவற்றை பயன் படுத்திய போது பல வகை துன் பங்களுக்கு ஆளாகியதால் மீண்டும் கொண்டு வந்து போட்டுச் சென்றுள்ளனர். விருப்பாட்சி கோபால் நாயக்கரும், திம்ம நாயக்கரும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர்.