Pages

Thursday, October 14, 2010

கால்நடைகளுக்கு போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெற வேண்டாம்

கால்நடைகளுக்கு போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெற வேண்டாம்
கால்நடை பராமரிப்புத்துறை இணைஇயக்குனர் அறிக்கை

கடலூர், அக்.15-

கால்நடைகளுக்கு போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெற வேண்டாம் என்று கால்நடை பராமரிப்புத்துறை இணைஇயக்குனர் இளங்கோவன் தெரிவித்து உள்ளார்.

கடலூர் மண்டல கால்நடைபராமரிப்புத்துறை இணைஇயக்குனர் இளங்கோவன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புகார் தெரிவிக்கலாம்

கால்நடை பராமரிப்புத்துறையில், கால்நடை அபிவிருத்தி முகமை மூலம் சினை ஊசி போட மட்டும் பயிற்சி அளித்து கிராமத்தில் சினை ஊசி போட மட்டும் அனுமதிக்கப்பட்டு உள்ள சிலர் அவர்கள் கிராமங்களில் கால்நடை மருத்துவர் மற்றும் கால்நடை ஆய்வாளர் போல் சிகிச்சை போன்ற பணிகளை செய்கிறார்கள். எனவே பொதுமக்கள் தங்கள் கால்நடைகளை அரசு கால்நடை மருத்துவமனை, கால்நடைமருந்தகங்களில் பணிபுரியும் கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் கால்நடை மருத்துவ கிளைநிலையங்களில் பணிபுரியும் கால்நடை ஆய்வாளர்களிடம் கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மற்ற போலியாக மருத்துவம் அளிக்கும் நபர்களிடம் தங்கள் கால்நடைகளுக்கு சிகிச்சை பெற வேண்டாம் என்றும் போலி மருத்துவர்கள் சிகிச்சை செய்தால் அருகில் உள்ள கால்நடை ஆய்வாளர் அல்லது உதவி மருத்துவரிடம் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.