வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளுடன் சேர்ந்து கிராமத்துக்குள் வந்த கடமான்
அந்திïர், அக்.6-
http://dailythanthi.com/article.asp?NewsID=598797&disdate=10/6/2010&advt=2
அந்திïரை அடுத்த பர்கூர் வனப்பகுதியில் உள்ள எண்ணமங்கலம் கிராமம் செலம்பூர் அம்மன் கோவில் அருகே பெரியண்ணன் என்ற விவசாயியின் தோட்டம் உள்ளது. இவர் தோட்டத்தில் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். காலை பட்டியில் இருந்து அந்த ஆடுகளை திறந்து விட்டால் அங்கு உள்ள வனப்பகுதிகளில் மேய்ந்து விட்டு மாலையில் தோட்டத்துக்கு வந்து விடும்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வனப்பகுதியில் மேய்ச்சலை முடித்து விட்டு தோட்டத்தில் உள்ள பட்டிக்கு திரும்பியபோது செம்மறி ஆட்டு குட்டிகளுடன் ஒரு கடமான் குட்டியும் சேர்ந்து வந்து விட்டது. இரவு முழுவதும் செம்மறி ஆடுகளுடன் அந்த கடமான் குட்டி தங்கி உள்ளது. நேற்று காலை பட்டியில் இருந்து திறந்து விடும்போது ஆடுகளுடன் சேர்ந்து கடமான் குட்டி வெளியே வந்ததை விவசாயி பெரியண்ணன் பார்த்தார். உடனே அவர் அந்த கடமான் குட்டியை பிடித்து பட்டியில் அடைத்துவிட்டு, அந்திïர் வனத்துறைக்கு தெரிவித்தார். வன அதிகாரி பழனிச்சாமி தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விவசாயி பெரியண்ணன் அந்த கடமானை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். அந்த கடமானை அதிகாரிகள் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.
இது குறித்து ஈரோடு மாவட்ட வன அதிகாரி ஜெகநாதனுக்கு அந்திïர் வன அதிகாரி பழனிச்சாமி தகவல் தெரிவித்தார். அதைதொடர்ந்து அவர் அங்கு வந்து கடமானை பார்வையிட்டார். அந்திïர் கால்நடை மருத்துவர் அர்ச்சுனன் அந்த மானை பரிசோதனை செய்ததில், அது 3 மாதமான ஆண் கடமான் குட்டி என்பது வந்தது. மானின் காலில் லேசான காயங்கள் இருந்தது.
காயத்திற்கு மருந்து தடவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதையடுத்து வனத்துறையினர் அந்த கடமானை வரட்டுப்பள்ளம் அணை அருகே உள்ள வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.
அங்கு இருந்து அந்த மான் உற்சாகத்துடன் துள்ளிக்குதித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது.