பதிவு செய்த நாள் 10/22/2010 1:19:31 AM
http://www.dinakaran.com/tamilnadudetail.aspx?id=18507&id1=4
தாராபுரம் : திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் ஆடுகளை பாதுகாப்பதற்கும்,தோட்டங்களில் திருடர்கள் மற்றும் விலங்குகள் நுழைந்து பயிர்களுக்கு சேதம் ஏற்படாமல் தடுப்பதற்கும் நாட்டு நாய்களை காவலுக்கு பயன்படுத்தி வந்தனர்.நாளடைவில் வறட்சி காரணமாக விவசாயம் செய்ய முடியாத நிலையில்,தோட்டங்களில் கோழிப்பண்ணைகளை நிறுவினர். நாய்கள் கோழிப்பண்ணைகளுக்குள் புகுந்து கோழிகளை கபளீகரம் செய்யும் நிலை ஏற்பட்டது. இதனால், மாட்டின் இறைச்சியில் விஷம் வைத்து நாய்கள் கொல்லப்பட்டன. படிப்படியாக நாட்டு நாய்களை அங்கு காண முடியாத நிலை ஏற்பட்டது.
விளைவு, விவசாய தோட்டங்களில் பாதுகாப்பற்ற நிலை உருவானது. காய்கறி, கிழங்கு பயிர்களை பன்றி உள்ளிட்ட விலங்குகள் சேதப்படுத்துகின்றன. தேங்காய், மோட்டார் திருடர்கள் கைவரிசையும் அதிகரித்து விட்டது. தற்போது நாட்டு நாய்களின் தேவை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. நாட்டு நாய்களை தேடி அலைகின்றனர். ஆனால், நாய்கள் எங்கும் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் ஒரு நாய்க்கு க்ஷீ1500 முதல் க்ஷீ2,000 வரை விலை கொடுக்க வேண்டியுள்ளது. விவசாயி ஒருவர் கூறுகையில், ‘முன்பு கேட்பாரற்று சுற்றிய தெருநாய்களை விஷம் வைத்து கொன்றதற்கு பரிகாரமாக தற்போது பெரும் விலை கொடுக்க வேண்டியுள்ளது’ என்றார்.