Pages

Wednesday, October 13, 2010

வெளிநாட்டினருக்கு மாட்டுக் கறி

காமன்வெல்த் போட்டியில் வெளிநாட்டினருக்கு மாட்டுக் கறி போடுகிறார்கள்-மோடி புகார்

வியாழக்கிழமை, அக்டோபர் 7, 2010, 11:44[IST
http://thatstamil.oneindia.in/news/2010/10/07/delhi-commonwealth-games-narendra-modi-beef.html

வததோரா: காமன்வெல்த் போட்டியின்போது வெளிநாட்டு வீரர்களுக்கும், அதிகாரிகளுக்கும் மாட்டுக் கறி போடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.

இது மகாத்மா காந்திக்கும், சர்வதோதய தலைவர் வினாபோபவேவுக்கும் இழைக்கும் அநீதியாகும். பசு வதைக்கும், மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கும் எதிராக கடுமையாக போராடியவர்கள் இந்தத் தலைவர்கள். இவர்களை காமன்வெல்த் போட்டிக் குழு அவமதித்துள்ளது என்றும் கூறியுள்ளார்

மோடி.

வததோராவில் நடந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், வெளிநாட்டு விருந்தினர்களுக்கு மாட்டுக் கறி போடுவதில்லை என்பதை குஜராத் அரசு ஒரு கொள்கையாகவே வைத்துள்ளது. கடந்த 2003ல் நடந்த வைப்ரன்ட் குஜராத் நிகழ்ச்சிக்கு வந்திருந்த வெளிநாட்டினருக்கு மாட்டுக் கறியை நாங்கள் சாப்பிடக் கொடுக்கவில்லை.

அவர்களிடம் குஜராத் மக்கள் சாப்பிடும் உணவைத்தான் உங்களுக்குத் தர முடியும் என்று நாங்கள் கூறியபோது அதை மறுக்காமல் அவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

ஆனால் இப்போதோ,காமன்வெல்த் போட்டிக்காக வரும் வெளிநாட்டினருக்கு படு தாராளமாக மாட்டுக் கறியைப் போட்டுவருகின்றனர் காமன்வெல்த் போட்டிக் குழுவினர் என்றார் மோடி.
வெளிநாட்டு விருந்தினர்களுக்கு மாட்டுக் கறி தரப்படாது என்று கடந்த ஜூலை மாதம் சுரேஷ் கல்மாடி கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.