மாட்டு வண்டிப்போட்டி செங்கோட்டையன் துவக்கி வைக்கிறார்
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=76031
செப்டம்பர் 02,2010,03:53 IST
ஓட்டப்பிடாரம்:ஓட்டப்பிடாரத்தில் அதிமுக.,பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 62வது பிறந்த நாளையொட்டி ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ., தொகுதி சார்பாக மெகா பரிசுத் தொகைக்கான மாட்டு வண்டிப்போட்டி மற்றும் பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வரும் 4 மற்றும் 5ம் தேதிகளில் நடைபெறவுள்ளதாக ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ.,மோகன் தெரிவித்தார்.இதுகுறித்து ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ.,மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது;
ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ., தொகுதி அதிமுக.,கழகம் சார்பில் அதிமுக.,பொதுச் செயலாளர் ஜெ.,62வது பிறந்தநாள் விழா வரும் 4 மற்றும் 5ம் தேதி கொண்டாடப்படுகிறது. பிறந்தநாளை முன்னிட்டு 4ம் தேதி ஓட்டப்பிடாரம் சிவன் கோயில் தெருவில் பொதுக்கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் அதிமுக.,தலைமை நிலைய செயலாளர் எம்எல்ஏ., செங்கோட்டையன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ., தொகுதிக்குட்பட்ட பள்ளிகளில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மற்றும் இரண்டாவது இடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தங்கமோதிரம் வழங்கப்படுகிறது.
மேலும் கழக தொண்டர்கள் 6 ஆயிரத்து 262 தொண்டர்களுக்கு வேஷ்டி, சேலைகள் வழங்கப்படுகிறது.விழாவிற்கு ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ., தொகுதி செயலாளர் புகழும்பெருமாள் தலைமை வகிக்கிறார். மாவட்ட செயலாளர் பள்ளத்தூர் முருகேசன், மாநில எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர் சரவணப்பெருமாள், மாவட்ட கழக பொறுப்பாளர் ஜெனிபர்சந்திரன், விளாத்திகுளம் எம்எல்ஏ., சின்னப்பன், பொதுக்குழு உறுப்பினர் வீரபாண்டிபொன்ராஜ், நாகம்பட்டி பண்ணையார் ராமானுஜம்கணேஷ், ஓட்டப்பிடாரம் பஞ்., கழக செயலாளர் கொம்புமகாராஜா உட்பட பலர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.
5ம் தேதி காலையில் மெகா பரிசு தொகைக்கான மாட்டுவண்டிப் போட்டி நடக்கிறது. பெரியமாட்டு வண்டிப் போட்டியை தலைமை நிலைய செயலாளர் எம்எல்ஏ., செங்கோட்டையன் துவக்கி வைக்கிறார். முதல் பரிசாக ரூ.62 ஆயிரத்து 620ம், 2வது பரிசாக ரூ.52 ஆயிரத்து 620ம், 3ம் பரிசாக ரூ.42 ஆயிரத்து 620ம் வழங்கப்படுகிறது.சிறிய மாட்டுவண்டிப் போட்டியை கோவில்பட்டி தொகுதி செயலாளர் மாணிக்கராஜா துவக்கி வைக்கிறார். முதல் பரிசாக ரூ.42 ஆயிரத்து 620ம், 2வது பரிசாக ரூ.32 ஆயிரத்து 620ம், 3ம் பரிசாக ரூ.22 ஆயிரத்து 620ம் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்