நாகர்கோவில், செப்.22-
http://www.dailythanthi.com/article.asp?NewsID=595615&disdate=9/22/2010&advt=2
இரணியல் பகுதியில் சுற்றித்திரிந்த 3 மலைப்பாம்புகள் பிடிபட்டன.
வலையில் மலைப்பாம்பு
இரணியல் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த வலையில் ஒரு மலைப்பாம்பு சிக்கிக் கிடந்தது. இதை நேற்று வேலைக்கு சென்ற தோட்டத் தொழிலாளர்கள் பார்த்து வன அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து மாவட்ட வன அதிகாரி சுந்தர்ராஜ் உத்தரவின் பேரில் பூதப்பாண்டி வன அதிகாரி செண்பகராமன் தலைமையில் வன ஊழியர் சுந்தரதாஸ் மற்றும் ஊழியர்கள் அங்கு விரைந்து சென்றனர். அங்கு வலையில் சிக்கிய மலைப்பாம்பை மீட்டனர். அது சுமார் 14 அடி நீளமும், 15 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது.
வில்லுக்குறியில் இதேபோல வில்லுக்குறி பாறையடி பகுதியில் இருந்தும் ஒரு மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர். அது 11 அடி நீளமும், 14 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது. அதேபோல வில்லுக்குறி சந்திப்பு பகுதியிலும் ஒரு மலைப்பாம்பு சிக்கியது. பிடிபட்ட 3 மலைப்பாம்புகளையும் வனத்துறையினர் பாதுகாப்பான மலைப்பகுதியில் கொண்டு விட்டனர்.