Pages

Tuesday, September 14, 2010

கால் ஒடிந்த நிலையில் கிடந்த மயில் குஞ்சு

ஈரோடு கருங்கல்பாளையத்தில் கால் ஒடிந்த நிலையில் கிடந்த மயில் குஞ்சு வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

ஈரோடு, செப்.15-
http://www.dailythanthi.com/article.asp?NewsID=594191&disdate=9/15/2010&advt=2

ஈரோடு கருங்கல்பாளையத்தில் கால் ஒடிந்த நிலையில் கிடந்த மயில் குஞ்சு மீட்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கால் ஒடிந்த மயில் குஞ்சு

ஈரோடு கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ்.நகரைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவர் அந்தப்பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று காலை கருங்கல்பாளையம் பகுதி வழியாக செல்லும் காலிங்கராயன் வாய்க்காலுக்கு சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு ஏதோ பறவை ஒன்று பறக்க முடியாமல் சிறகுகளை அடித்து கொண்டு இருந்தது. உடனே லட்சுமணன் அருகில் சென்று அந்த பறவையை எடுத்து பார்த்தார். அப்போது அது மயில் குஞ்சு என்பதும், அதன் ஒரு கால் ஒடிந்து இருப்பதால், அதனால் நடக்கவும், பறக்கவும் முடியாமல் இருப்பது தெரியவந்தது.

வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

மயில் குஞ்சை எடுத்து வந்த லட்சுமணன் அதை அந்தப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் கோபாலிடம் கொடுத்தார். அவர் மயில் குஞ்சின் காலில் மருந்து வைத்து கட்டு போட்டார். பின்னர் இது குறித்து அவர் ஈரோடு வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
அதன் பேரில் கருங்கல்பாளையத்திற்கு வந்த வனத்துறை ஊழியர்கள், கால் ஒடிந்த நிலையில் இருந்த மயில் குஞ்சை பெற்று, வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றார்கள். கால் ஒடிந்த இந்த மயில் குஞ்சுக்கு வனத்துறை அதிகாரிகள், கால்நடை ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.