Pages

Saturday, September 4, 2010

கோழிகளை அடைக்க எதிர்ப்பு

கோழிகளை அடைக்க தலாய் லாமா எதிர்ப்பு

பதிவு செய்த நாள் 9/5/2010 12:41:35 AM
http://dinakaran.com/indiadetail.aspx?id=14644&id1=1

புதுடில்லி : மின்சாரக் கூண்டுகளில் அடைத்து வளர்க்கப்படும் கோழி முட்டைகளுக்கு புத்த மதத் தலைவர் தலாய் லாமா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் மின்சாரக் கூண்டுகளில் அடை த்து வளர்க்கப்படும் கோழி முட்டைகளுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பி வருகிறது. சுவீடன், பின்லாந்து, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, நார்வே ஆகிய நாடுகள் ஏற்கனவே இந்த முட்டைகளுக்கு தடை விதித்து விட்டன. அமெரிக்காவிலும் ஒவ்வொரு மாநிலமாக தடை விதிக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் இதுதொடர்பாக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற புத்த மதத் தலைவர் தலாய் லாமா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘மின்சாரக் கூண்டுகளில் கோழிகளை கட்டாயப்படுத்தி அடைக்கப்படும் சம்பவம் என்னை பெரிதும் பாதித்து வருகிறது. சிறிய கூண்டுகளில் அடைக்கப்படும் கோழிகளால் தன்னுடைய இயற்கை செயல்களான இறக்கைகளை விரித்தல், பூமியில் கால்களால் கீறுதல், போதிய இடத்தில் நிற்பது போன்றவை செய்ய இயலாது. எனவே, இதுபோன்று வளர்க்கப்படும் கோழி முட்டைகளை வாங்காமல் சுதந்திரமாக வளர்க்கப்படும் கோழி முட்டைகளை வாங்க மக்கள் முன் வர வேண்டும். அப்போது தான் இதுபோன்ற வளர்ப்பு குறையும்’ என்று தெரிவித்துள்ளார்.