Pages

Saturday, September 25, 2010

ஜல்லிக்கட்டு முறைப்படுத்தும் சட்டம்-விளக்கம் கேட்கும் சுப்ரீம் கோர்ட்

தமிழக அரசு கொண்டு வந்த ஜல்லிக்கட்டு முறைப்படுத்தும் சட்டம்-விளக்கம் கேட்கும் சுப்ரீம் கோர்ட்

சனிக்கிழமை, செப்டம்பர் 25, 2010, 9:59[IST]
http://thatstamil.oneindia.in/news/2010/09/25/tamilnadu-jallikattu-pongal-sc-law.html

டெல்லி: வருடத்தில் ஐந்து மாதங்கள் வரை ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்தலாம் என்று ஜல்லிக்கட்டை முறைப்படுத்தும் சட்டத்தில் தமிழக அரசு கூறியிருப்பது குறித்து உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எச்.எல். கோகலே, ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு ஜல்லிக்கட்டை முறைப்படுத்துவதற்காக கொண்டு வந்த சட்டம் குறித்து நீதிபதிகள் சில கேள்விகளைக் கேட்டனர்.

அவர்கள் கூறுகையில், பொங்கல் பண்டிகை ஜனவரி மாதத்தோடு முடிந்து போகிறது. ஆனால் ஐந்து மாதங்கள் வரை ஜல்லிக்கட்டை நடத்த வகை செய்துள்ளீர்கள். அதாவது வருடம் முழுவதும் பொங்கலையும், ஜல்லிக்கட்டையும் கொண்டாட விரும்புகிறீர்கள். இது எப்படி சரியாகும்.

இந்த சட்டத்தில் அரசு சில திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று கூறினர். பின்னர் வழக்கை அக்டோபர் 27ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

கடந்த 2009ம் ஆண்டு தமிழ்நாடு ஜல்லிக்கட்டு முறைப்படுத்தல் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. இதன் மூலம் ஜனவரி முதல் மே மாதம் வரை ஜல்லிக்கட்டை நடத்தலாம். அதற்காக அரசு விதித்துள்ள பல்வேறு நிபந்தனைகலை கடைப்பிடிக்க வேண்டும். ரூ. 2 லட்சம் காப்புத் தொகையை போட்டி அமைப்பாளர்கள் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.