Pages

Sunday, September 26, 2010

மின்னல் தாக்கி 5 மாடுகள் செத்தன

தலைவாசல் அருகே இடியுடன் பலத்த மழை பெய்தது; மின்னல் தாக்கி 5 மாடுகள் செத்தன

தலைவாசல், செப்.27-
http://dailythanthi.com/article.asp?NewsID=596722&disdate=9/27/2010&advt=2

தலைவாசல் அருகே இடியுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் 5 பசு மாடுகள் செத்தன.

இடியுடன் மழை

சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மதிய வேளையில் அதிக வெப்பமும், மாலையில் ஆங்காங்கே மழையும் பெய்து வந்தது. இதேபோல நேற்று தலைவாசல் பகுதியில் காலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

ஆனால், மதியம் 1 மணியளவில் திடீரென இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. தலைவாசல், தேவியாகுறிச்சி, ஆறகளூர், சித்தேரி, வரகூர், புத்தூர், வீரகனூர் ஆகிய பகுதிகளில் இந்த மழை பரவலாக பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சுமார் 1 மணி நேரம் இடைவிடாது பெய்த இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி சிறிய குட்டைபோல காட்சியளித்தன.

5 மாடுகள் செத்தன

இந்த நிலையில் சிறுவாச்சூர் அருகே உள்ள பாரதிநகரை சேர்ந்த விவசாயி ரத்தினம் தனக்கு சொந்தமான நிலத்தில் இருந்த தென்னை மரத்தில் 2 பசு மாடுகளை கட்டி இருந்தார். மழை காரணமாக கண்ணை பறிக்கும் வகையில் தோன்றிய மின்னல் திடீரென தென்னை மரத்தை தாக்கியது. இதில் அந்த 2 பசுமாடுகளும் பரிதாபமாக செத்தன.

இதேபோல தேவியாகுறிச்சி தெற்குமேடு பகுதியை சேர்ந்த ராமசாமி தனது தோட்டத்தில் உள்ள மரத்தில் 2 கறவை மாடுகளை கட்டி இருந்தார். திடீரென மரத்தில் மின்னல் தாக்கி அந்த 2 மாடுகளும் செத்தன. நாவக்குறிச்சியை சேர்ந்த விவசாயி காமராஜ் என்பவருக்கு சொந்தமான ஒரு பசுமாடும் மின்னல் தாக்கி செத்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிராம நிர்வாக அதிகாரிகள் அங்கமுத்து, முத்துசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.