வன விலங்குகளின் குடிநீர் தேவைக்கு பழனி வனப்பகுதியில் 5 தடுப்பணைகள்
பழனி, செப்.26-
http://dailythanthi.com/article.asp?NewsID=596462&disdate=9/26/2010&advt=2
வன விலங்குகளின் குடி நீர் தேவைக்காக பழனி வனப்பகுதியில் 5 இடங் களில் தடுப்பணைகள் கட்டப்பட உள்ளன.
தடுப்பணைகள்
பழனி வனப்பகுதியில் காட்டு யானைகள், கடமான்கள், புள்ளி மான்கள், காட்டு எரு மைகள், கேளையாடுகள், மயில்கள், செந்நாய்கள் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. வன விலங்குகளின் குடிநீர் தேவைக்காக பழனி வனப்பகுதியில் ஏற்கனவே பல்வேறு இடங்களில் தடுப்ப ணைகள், குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.
இதன்தொடர்ச்சியாக நடப்பு ஆண்டில் பழனியை அடுத்த தேக்கம்தோட்டம் வனப்பகுதியில் மூலிகை பண்ணையையொட்டி அமைந்துள்ள காட்டாற்றில் 3 இடங்களில் தலா ரூ.50 ஆயிரம் மதிப்பில் தடுப்பணைகள் கட்டப்பட உள்ளன. இதே போன்று புளியம்பட்டி வனப் பகுதியிலும் 2 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட உள்ளன. விரைவில் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.
மின்சார வேலி
மேலும் நடப்பு ஆண்டில் பழனி வனச்சரகம் பள்ளங்கி வனப்பகுதியில் காட்டு எருமைகள் மற்றும் காட்டு யானைகள் அட்டகாசத்தை தடுக்க 2 கி.மீட்டர் தூரத்திற்கு சோலார் மின்வேலி அமைக்கப்பட உள்ளது.
இதே போன்று ஆண்டிப்பட்டி அருகிலும் யானைகள் அட்டகாசத்தை தடுக்க 2 கி.மீட்டர் தூரத்திற்கு சோலார் மின் வேலி அமைக்கப்பட உள்ளது. சோலார் மின்சார வேலி அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.