Pages

Friday, September 17, 2010

புலிக்குட்டிகளுக்கு பெயர் சூட்டினார் கருணாநிதி

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2010,15:26 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=86772

சென்னை : இந்தியாவில் மிகவும் அரிதான வெள்ளைப் புலிகள் தற்போது ஏறத்தாழ 100 மட்டுமே உள்ளன. புதுடில்லியிலுள்ள உயிரியல் பூங்காவிற்கு வழங்கி, ஓர் ஆண் வெள்ளைப் புலியும், ஒரு பெண் வெள்ளைப் புலியும் அங்கிருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவிற்குப் பெறப்பட்டன. அந்த வெள்ளைப் புலிகள் மூலம் கடந்த ஜூன் மாதத்தில் ஓர் ஆண் வெள்ளைப் புலிக் குட்டியும், இரண்டு பெண் வெள்ளைப் புலிக் குட்டிகளும் பிறந்துள்ளன. அந்த வெள்ளைப் புலிக் குட்டிகளில் ஆண் புலிக் குட்டிக்கு சோழப் பேரரசின் சின்னமாகப் புலி விளங்கியதால், சோழப் பேரரசின் நினைவாக செம்பியன் என்ற பெயரும், ஒரு பெண் வெள்ளைப் புலிக் குட்டிக்கு - இந்திரா காந்தி நினைவாக இந்திரா என்றும், மற்றொரு பெண் வெள்ளைப் புலிக் குட்டிக்கு - காந்தியின் தென்னாப்பிரிக்க சுதந்திரப் போரில் தீரம் காட்டிய வீரப் பெண்மணி தில்லையாடி வள்ளியம்மை அவர்களின் நினைவாக வள்ளி  என்றும் முதல்வர் இன்று பெயர்களைச் சூட்டினார்.