பசுவதை தடை சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கக் கோரி பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் ஈசுவரப்பா தலைமையில் பெங்களூரில் நாளை நடக்கிறது
http://www.dailythanthi.com/article.asp?NewsID=592022&disdate=9/5/2010&advt=2
பெங்களூர், செப்.5-
பசுவதை தடை சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கக் கோரி பா.ஜனதா சார்பில் பெங்களூரில் நாளை (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
பசுவதை தடை சட்ட மசோதா
பசுவதை தடை சட்ட மசோதா கர்நாடக சட்டசபை மற்றும் மேல்-சபையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த மசோதாவை கவர்னரின் ஒப்புதலுக்காக அரசு அனுப்பி வைத்தது. ஆனால் கவர்னர் எந்த ஒருமுடிவும் எடுக்காமல் மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்து விட்டார்.
இந்த மசோதாவை நிறைவேற்றுவதில் பா.ஜனதா அரசு ஆர்வம் காட்டி வந்தபோதிலும், ஜனாதிபதி கையெழுத்திடாததால் நடைமுறைக்கு வருவது தாமதமாகி வருகிறது.
நாளை ஆர்ப்பாட்டம்
இதனால், உடனடியாக பசுவதை தடுப்பு சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்க கோரியும், இந்த பிரச்சினையில் கர்நாடக கவர்னரின் நடவடிக்கையை கண்டித்தும் மாநில பா.ஜனதா பிரமாண்டமான ஆர்ப்பாட்டத்தை நடத்த முடிவு செய்து உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் நாளை (திங்கட்கிழமை) டவுன்ஹால் எதிரே நடக்கிறது. காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில பா.ஜனதா தலைவர் ஈசுவரப்பா தலைமை தாங்குகிறார். மந்திரிகள், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள், எம்.பி.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.