பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2010,17:41 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=86777
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=86777
நாகர்கோவில் : களியக்காவிளை அருகே, சத்துணவுடன் கொடுப்பதற்காக வேகவைக்கப்பட்ட முட்டையில் கோழிக்குஞ்சு இருந்ததால், ஒருநாள் வினியோகம் ரத்து செய்யப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே அதங்கோட்டில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து கான்ட்ராக்டர் மூலம் முட்டை சப்ளை செய்யப்படுகிறது. கடந்த 16ம் தேதி இந்த கான்ட்ராக்டர் கொடுத்த முட்டைகள் வேகவைக்கப்பட்டன. சிறிது நேரத்தில் துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து ஆசிரியர்களும், சத்துணவு ஊழியர்களும் முட்டைகளை சோதனை செய்தனர். சில முட்டைகள் கெட்டிருந்தன. சில முட்டைகளில் குஞ்சு பொரிப்பதற்கான அறிகுறிகள் தெரிந்தன. இதைத்தொடர்ந்து, அறையில் இருந்த பிற முட்டைகளையும் சோதனை செய்த போது, அதிலும் முட்டைகள் அழுகிய நிலையில் காணப்பட்டன. இதைத் தொடர்ந்து, அன்று ஒரு நாள் மட்டும் முட்டை "கட்' செய்யப்பட்டது. இது தொடர்பாக கான்ட்ராக்டர் மீது ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.