http://www.dinakaran.com/LN/latest-breaking-news.aspx?id=6891
17.09.2010
17.09.2010
கூடுவாஞ்சேரி : வண்டலூர் உயிரியல் பூங்காவில் புலி, சிறுத்தை, யானை ஆகியவற்றை ஒரு ஆண்டுக்கு வேலம்மாள் கல்வி அறக்கட்டளை தத்தெடுத்துள்ளது.
வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்குள்ள விலங்குகள் மற்றும் பறவைகளை தனியார் தத்தெடுக்கும் திட்டத்தை கடந்த மாதம் அரசு அறிமுகப்படுத்தியது. சென்னையில் உள்ள வேலம்மாள் கல்வி அறக்கட்டளை (வேலம்மாள் பள்ளி நிர்வாகம்) சார்பில், பூங்காவில் உள்ள புலி, சிறுத்தை, யானை ஆகிய விலங்குகளை ஒரு ஆண்டுக்கு தத்தெடுத்தது. இதற்காக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கு தொகை 1 லட்சத்துடன் 3,22,533 க்கான காசோலையை, கல்வி அறக்கட்டளை நிர்வாக அதிகாரி வேல்முருகன் சார்பில் பள்ளியின் முதன்மை முதல்வர் கைலாசம் மற்றும் மாணவ, மாணவிகள் உயிரியல் பூங்கா இயக்குனர் கே.எஸ்.எஸ்.வி.பி.ரெட்டியிடம் வழங்கினார்.