Pages

Saturday, September 4, 2010

வனப்பகுதி ஆக்கிரமிப்பு


பழனி பகுதி விளைநிலங்களில் காட்டு யானைகள் அட்டகாசத்தை தடுப்பதற்கான வழிமுறைகள் உலக இயற்கை நிறுவனம் ஆய்வு

http://www.dailythanthi.com/article.asp?NewsID=591940&disdate=9/5/2010&advt=2
பழனி, செப்.5-

பழனி பகுதியில் உள்ள விளைநிலங்களில் காட்டு யானைகள் அட்டகாசத்தை தடுப்பதற்கான வழி முறைகள் தொடர்பாக உலகளாவிய இயற்கைக்கான நிதியம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது.

காட்டு யானைகள்

திண்டுக்கல் மாவட்டம் பழனி வனப்பகுதி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. சுமார் 19 ஆயிரம் ஹெக்டேர் பரப் பளவு உடையது. பழனி வனச்சரகத்தில் சுமார் 100 யானைகள் வரை வசிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக காட்டு யானைகள் வனப்பகுதியை யொட்டி அமைந்துள்ள விளை நிலங்களுக்கு உணவு மற்றும் குடிநீர் தேடி வரத்தொடங்கி உள்ளன.

மேலும் யானைகள் விவசாய பயிர்களை சாப்பிட்டு சேதப் படுத்துகின்றன. மேலும் விவசாயிகளைத் தாக்கி உயி ரிழப்பையும் ஏற்படுத்தி வருகின்றன. இதைத்தொடர்ந்து யானைகள் அட்டகாசத்தை தடுப்பது தொடர்பாக உலக ளாவிய இயற்கைக்கான நிதியம் அமைப்பைச் சேர்ந்த முது நிலை திட்ட அதிகாரி சிவசுப் பிரமணியம் மற்றும் ஊழியர்கள் பழனி வனப்பகுதியில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

கடந்த 2 நாட்களாக பழனி வனப்பகுதியில் அவர்கள் ஆய்வு நடத்தினர். திண்டுக்கல் மாவட்ட உதவி வனபாது காவலர் வேலுச்சாமி மற்றும் பழனி வனச்சரகர் தர்மராஜ் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினர்.

அதிகரிப்பு

உலக இயற்கை அமைப்பினர் நடத்திய ஆய்வில் கடந்த சில ஆண்டுகளாக பழனி வனப் பகுதி காட்டு யானைகள் தாங்கள் வாழும் பரப்பை அதிகப் படுத்தி உள்ளது தெரியவந்தது. இதற்கு விவசாயிகள் ரிசர்வ் வனப்பகுதியில் 2 கி.மீட்டர் வரை ஆக்கிரமிப்புகள் செய்து விவசாயம் செய்துள்ளது முக்கிய காரணம் ஆகும். இந்த விளைநிலங்களில் விவசாய பயிர்களை சாப்பிட்டு பழகிய காட்டு யானைகள் தொடர்ந்து அடுத்தடுத்து உள்ள விவசாய நிலங்களுக்கும் வரத் தொடங்கி உள்ளன. நல்ல உணவு, குடிநீர் கிடைப் பதால் தொடர்ந்து விளை நிலங்களுக்கு காட்டு யானைகள் வருகின்றன. மேலும் இதனால் தங்கள் வாழ்விட த்தை நீட்டித்துக் கொண்டுள்ளன.

தேக்கம்தோட்டம் முதல் கரடிக்குட்டு மலை, பாலாறு அணை ஜீரோ பாயின்ட் பகுதியில் இருந்து மேல் நோக்கி 2 கி.மீட்டர் தூரத்திற்கு யானைகள் வருவதை தடை செய்யும் வகையில் அமைப்புகள் ஏற்படுத்து வது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் இவ்வாறு ஏற்படுத்தினால் யானைகள்வேறு பகுதியில் உள்ள விளை நிலங்களில் புகுந்து சேதத்தை ஏற்ப டுத்தும் என்பதால் இந்த யோசனை கைவிடப்பட்டது.

தலைமை தாங்கும் யானை

யானைகள் கூட்டத்திற்கு பெண் யானைகளே தலைமை தாங்குகின்றன. தலைமை தாங்கும் யானைகளை பிடித்துச் சென்று வேறு வனப்பகுதியில் விட்டு விட்டால் காட்டு யானைக் கூட்டம் பிரிந்து விடும். யானைகள் அட்டகாசமும் குறைந்து விடும். பழனி வனப்பகுதியில் இவ்வாறு செய்வது சாத்தியமா என்பது குறித்தும் ஆலோசிக்கப் பட்டது.

பொன்னிமலைக்கரடு, வரதாபட்டிணம், சட்டப்பாறை, வெண்கலப்பாறை ஆகிய இடங்களில் யானைகளுக்கு தேவையான நிழல், உணவு, நீர் இருப்பதால் யானைகள் இப்பகுதிலேயே தொடர்ந்து இருப்பதும் ஆய்வில் தெரிய வந்தது. தேக்கம் தோட்டத்திற்கு கிழக்கே சுமார் 18 யானைகள் உள்ளன.

உலக இயற்கை நிறுவனத்தினர் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். ஆய்வு முடிந்ததும் மாவட்ட வன அலுவலரிடம் தங்களது அறிக்கையை அளிப்பர். இதன் அடிப்படையில் யானைகள் அட்டகாசத்தை தடுக்கும் வழிமுறைகள் குறித்து முடிவு செய்யப்படும்.