Pages

Friday, August 13, 2010

இறந்த நாய்க்கு திதி கொடுத்த குடும்பம்

இறந்த நாய்க்கு திதி கொடுத்த அதிசய குடும்பம் : கிராமத்தினருக்கு சாப்பாடு போட்டு பிரார்த்தனை

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2010,01:26 IST

http://www.dinamalar.com/News_Detail.asp?id=287

Dinamalar Online Edition


ராமேஸ்வரம் : வீட்டில் ஆசையாக வளர்த்த நாய் இறந்து ஒரு ஆண்டு ஆனதால், நாயின் ஆத்மா சாந்தியடைய, நாயை வளர்த்த குடும்பத்தினர் திதி கொடுத்து, கிராமத்தினருக்கே சாப்பாடு போட்டனர்.

ராமேஸ்வரம் அருகே பாம்பன் சின்னப்பாலத்தை சேர்ந்தவர் மீனவர் கோட்டைமுனி (40). இவரது மகன், இரண்டு ஆண்டுக்கு முன், பிறந்து கண் திறக்காத நாய்க்குட்டி ஒன்றை தூக்கி வந்துள்ளார். அதற்கு "ஜானி' என பெயரிடப்பட்டு, வளர்த்தனர். தினமும் மீன், கறி, பால்கோவா என நாய்க்கு பிடித்தமான பொருட்களை வாங்கித் தந்துள்ளனர். நாய்க்கு வலிப்பு நோய் வந்ததால், ராமேஸ்வரம் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், 2009 மார்ச் 25ல் தெருநாய்களின் தாக்குதலுக்குள்ளாகி "ஜானி' இறந்தது. இறந்து ஒரு ஆண்டுக்கு பின், அதே நாளில் (நேற்று)ஆசையாக வளர்த்த நாய்க்கு குடும்பத்தினர் திதி கொடுத்தனர். நாய் புதைக்கப்பட்ட இடத்தில் பல்வேறு தின்பண்டங்களை வைத்து, கும்பிட்ட கோட்டைமுனி குடும்பத்தினர், வீட்டில் நாயின் படத்திற்கு மாலையிட்டு படையல் (உணவு) போட்டு, அதன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்தனர். மேலும், அன்று கிராமத்தினருக்கே சாப்பாடு போட்டனர்.

கோட்டைமுனி கூறியதாவது: நான் கடலுக்கு சென்றால் திரும்பி வரும் வரை, இரண்டு, மூன்று நாட்கள் சாப்பிடாமல் காத்திருக்கும். ஒரு ஆண்டுக்கு முன் என் மகளுக்கு உடல் நலம் சரியில்லாததால், ஆட்டோவில் மகளுடன் ராமேஸ்வரம் சென்றேன். ஆட்டோவை தொடர்ந்து நாய் வந்ததை கவனிக்கவில்லை. வழியில் திடீரென வலிப்பு வர, வழியில் படுத்துவிட்ட ஜானியை, தெருநாய்கள் சூழ்ந்து கடித்து குதறியதில் இறந்து விட்டது. பிள்ளைகள் எல்லாம் இறந்த நாயை பார்த்து அழுது விட்டனர். ஜானியை சுடுகாட்டில் புதைத்து மனிதர்களுக்கு செய்வது போல் 16 நாள் காரியமும் செய்தோம். தற்போது ஒருஆண்டு முடிந்ததால் திதி கொடுத்தோம், என்றார்.