Pages

Monday, August 23, 2010

பசுவதை தடை சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

பசுவதை தடை சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கக் கோரி அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பா.ஜனதா ஆர்ப்பாட்டம் செப். 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை நடத்த முடிவு

பெங்களூர், ஆக.23-
http://www.dailythanthi.com/article.asp?NewsID=588978&disdate=8/23/2010&advt=2

பசுவதை தடை சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்க வற்புறுத்தி அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் செப்டம்பர் 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை ஆர்ப்பாட்டம் நடத்த பா.ஜனதா முடிவு செய்து உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சி.டி.ரவி கூறி உள்ளார்.
நிர்வாகிகள் கூட்டம்

கர்நாடக மாநில பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் பெங்களூர் அருகே உள்ள ரெசார்ட் ஓட்டலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் ஈசுவரப்பா, முதல்-மந்திரி எடிïரப்பா, அனந்தகுமார் எம்.பி. மற்றும் மந்திரிகள், கட்சியின் மேல் மட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு பிறகு கட்சியின் பொதுச் செயலாளர் சி.டி.ரவி எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறியதாவது:-

பசுவதை தடை சட்டம்

சட்டசபை மற்றும் மேல்-சபையில் பசுவதை தடை சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த மசோதா கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அவர், அதற்கு அனுமதி வழங்காமல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்து உள்ளார். இது துரதிர்ஷ்டவசமானது.

இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி உடனடியாக கையெழுத்து போட்டு அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி செப்டம்பர் 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை எல்லா சட்டமன்ற தொகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சத்தியாகரக போராட்டம்

செப்டம்பர் 6-ந்தேதி பெங்களூரில் மாநில அளவிலான தர்ணா சத்தியாகரக போராட்டம் நடக்க உள்ளது. இதில் முதல்-மந்திரி எடிïரப்பா, கட்சியின் தலைவர் ஈசுவரப்பா மற்றும் முக்கிய நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்கள் கலந்து கொள்கிறார்கள். ஆனால் இந்த ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்குள் ஜனாதிபதி இந்த மசோதாக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.