பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2010,07:10 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=66523
காங்கயம்:பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் கால்நடை இன விருத்தி தொடர்பான கருத்தரங்கு, "லைப் நெட் ஒர்க்' மற்றும் சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி நிலையம் சார்பில் காங்கயத்தை அடுத்துள்ள குட்டைபாளையத்தில் நடந்தது. அமைச்சர் பழனிசாமி பேசியதாவது:நமது நாட்டின் பாரம்பரியமிக்க கால்நடை இனங்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு, தமிழக அரசு ஆண்டுதோறும் 5,100 இடங்களில் கால்நடை மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறது. ஒரு மாவட்டத்துக்கு சராசரியாக 300 முகாம் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு முகாமிற்கும் 2,000 கால்நடைகள் வரை பயன்பெறுகின்றன.காங்கயம் இனத்தைச் சேர்ந்த மூன்று லட்சம் பசுக்களுக்கு இன விருத்தி ஊசி போடப்பட்டதில், 58 கன்றுக்குட்டிகள் மட்டுமே பிறந்துள்ளன. கால்நடைகளை முறையாக பராமரிக்காததாலும், கர்ப்பப்பை கோளாறுகளாலும் இதுபோன்று ஏற்படுகிறது. தமிழகத்தில் மட்டும் 20 லட்சம் பசுக்களுக்கு மலட்டுத்தன்மை இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இவ்வாறு, அமைச்சர் பழனிசாமி பேசினார்.