சேலம் சூரமங்கலம் பகுதியில் தெருவில் சுற்றித்திரிந்த 25 நாய்கள் வேட்டையாடி பிடிப்பு
சேலம்,ஆக.15-
dailythanthi online edition
http://www.dailythanthi.com/article.asp?NewsID=587338&disdate=8/15/2010&advt=2
சேலம் சூரமங்கலத்தில் பொதுமக்களுக்கு இடைïறாக தெருவில் சுற்றித்திரிந்த 25 நாய்கள் வேட்டையாடி பிடிக்கப்பட்டது.
நாய்கள் வேட்டை
சேலம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அஸ்தம்பட்டி, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு இடைïறாக வீதிகளில் சுற்றித்திரியும் நாய்கள், சுகாதார சீர்கேட்டை உருவாக்கும் பன்றிகள் ஆகியவற்றை பிடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் கே.எஸ்.பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, சேலம் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் நாய் மற்றும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தும் பணியை சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
25 நாய்கள் பிடிப்பு
இந்த நிலையில் நேற்று சூரமங்கலம் மண்டலத்துக்குட்பட்ட ஜங்ஷன், திருவாக்கவுண்டனூர் பைபாஸ், பள்ளப்பட்டி, மெய்யனூர் ஆகிய இடங்களில் சுகாதார மேற்பார்வையாளர் இளங்கோவன், சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ், குணசேகரன், சேகர் ஆகியோர் தலைமையில் 8-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தெருவில் சுற்றித்திரியும் நாய்களை கண்ணி வைத்து பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
காலை முதல் பிற்பகல் வரை மொத்தம் 25 நாய்கள் பிடிக்கப்பட்டன. அவற்றில் ஆண்- பெண் நாய்கள் தனியாக பிரிக் கப்பட்டு `கருத்தடை` ஆபரேஷன் செய்யப்பட்டு வீராணத்தில் உள்ள நாய்களுக்கான செட்டில் விடப்பட்டது. அங்கு 2 நாட்கள் வைக்கப்பட்டு, அதன் பின்னர் ஊருக்கு அப்பால் காட்டுப்பகுதியில் விடப்படும் என சுகாதார ஆய்வாளர் சுரேஷ் தெரிவித்தார்.