பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2010,04:53 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=67185
மூணாறு: மூணாறு அருகே சிட்டிவாரை எஸ்டேட் என்.சி. டிவிசன் காய்கறி தோட்டத்தில் வைக்கப் பட்டிருந்த வலையில் நேற்று முன்தினம் மதியம், ஒரு சிறுத்தை உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. அதன் வயிற்றில், வலைக் காக பயன்படுத்தப்பட்ட கம்பி குத்தியிருந்தது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் சிறுத்தை உயிருடன் இருந்ததால் பக்கத்தில் செல்ல பயந்தனர். உயிருடன் சிறுத்தையை மீட்க திருவனந்த புரத்தில் இருந்து கால்நடை டாக்டர் களையும், தமிழ்நாடு வால்பாறையில் இருந்து கூண்டும் வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதே நேரத்தில், சிறுத்தையின் உயிரை காக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நேற்று காலை சிறுத்தையின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனை கண்ட "மியூஸ்' என்ற சுற்றுச்சூழல் மற்றும் வன விலங்கு பாதுகாப்பு அமைப்பினர் சிறுத்தையை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களை வனத் துறையினர் தடுத்து விட்டனர். இந்நிலையில், காலை 8.30 மணிக்கு சிறுத்தை இறந்தது. அதன் பிறகே திருவனந்தபுரத்தில் இருந்து வந்த கால்நடை டாக்டர்கள் சிறுத்தைக்கு பிரேத பரிசோதனை நடத்தினர். சிறுத்தையை காப்பாற்ற வனத்துறையினர் தவறியதை கண்டித்து மியூஸ் அமைப்பினர் மூணாறில் கண்டன ஊர்வலம் நடத்தினர்.