Pages

Thursday, October 7, 2010

விளைநிலங்களில் புகுந்து யானைகள் அட்டகாசம்

இடிகரை பகுதியில் உள்ள விளைநிலங்களில் புகுந்து யானைகள் அட்டகாசம்

துடியலூர்,அக்.7-
http://dailythanthi.com/article.asp?NewsID=598823&disdate=10/7/2010&advt=2

இடிகரை பகுதியில் உள்ள விளைநிலங்களில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன. அந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

யானைகள் அட்டகாசம்

கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இருந்து காட்டு யானைகள் சுற்றுப்புற கிராமப்பகுதிகளான ஆனைகட்டி, சின்னதடாகம், பன்னிமடை, பூச்சிïர், கோவனூர், பாலமலை, அனுவாவி சுப்பிரமணியசாமி கோவில் ஒரு பகுதி ஆகிய இடங்களில் உள்ள விவசாய விளைநிலங்களில் புகுந்து கரும்பு, வாழை, தென்னை மற்றும் பயிர் வகைகளை தின்று சேதப்படுத்தி வருகிறது. அவ்வப்போது வனத்துறையினர் யானைகளை அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விரட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 2 ஆண் யானைகள் பூச்சிïர் பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம் சாலைக்கு வந்து, அங்குள்ள பள்ளங்கள் வழியாக இடிகரை வடக்கு தோட்டம் வந்தன. அங்கு குணசேகரன் என்பவரது தோட்டம், குப்புசாமி என்பவரது தோட்டம், கோழிப்பண்ணை தோட்டங்களில் புகுந்து கரும்பு, வாழை, தென்னை, மக்காசோளம் ஆகியவற்றை தின்று சேதப்படுத்தின.

வனத்துறையினர் நடவடிக்கை

வழக்கமாக இரவு 10 மணிக்கு வரும் யானைகள் அதிகாலை நேரத்துக்குள் பயிர் வகைகளை தின்று விட்டு திரும்பி விடும். ஆனால் இந்த 2 காட்டு யானைகளும் அந்த தோட்டங்களிலேயே நின்றுக்கொண்டிருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த குணசேகரனும், குப்புசாமியும் இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் பன்னீர்செல்வத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அவரது உத்தரவின்பேரில், வனவர் சந்திரன் மற்றும் வனஊழியர்கள் கண்ணன், சொக்கலிங்கம், ஏசுராஜ் ஆகியோரும், தன்னார்வ தொண்டர்கள் 10-க்கும் மேற்பட்டவர்களும் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு விரைந்து சென்றனர். அவர் கள் யானைகள் ஊருக்குள் புகுந்துவிடாமல் தடுத்தனர். தொடர்ந்து அந்த 2 காட்டுயானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்ட அவர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.