Pages

Monday, October 11, 2010

20 நாய்களை பிடித்து வெளியேற்றம்


திருப்பதி மலையில் இருந்து 300 பிச்சைக்காரர்கள் வெளியேற்றம்

பதிவு செய்த நாள் 10/11/2010 1:00:40 AM
http://dinakaran.com/indiadetail.aspx?id=17629&id1=1

திருப்பதி : திருமலையில் 300 பிச்சைக்காரர்கள் வெளியேற்றப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார். திருப்பதி திருமலையில் தேவஸ்தான சுகாதாரத்துறை அதிகாரி விஜயலட்சுமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயில் நான்கு மாட வீதிகளில் வாகன சேவை நடைபெறும் போது தெருக்கள் மற்றும் கோயில் சுற்றுப்புறங்களை தூய்மையாக பாதுகாக்க 15 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். நவராத்திரி பிரம்மோற்சவத்தில் கூடுதலாக 365 கான்டிராக்ட் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் 500 ஸ்ரீவாரி சேவை பக்தர்களும் சுகாதாரப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.திருமலையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது. பேப்பர் பிளேட், பேப்பர் டம்ளர்களை பயன்படுத்த வேண்டும். மேலும் நான்கு மாட வீதிகள், கோயில் சுற்றுப்புறங்களில் பக்தர்கள் வீசும் குப்பைகளை அகற்ற 3 டிராக்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. திருமலையில் பிச்சைக்காரர்களே இருக்க கூடாது என்பதற்காக 300க்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்களை பிடித்து, திருப்பதியில் உள்ள இல்லத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

திருமலையில் மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்த 20 நாய்களை பிடித்து வெளியேற்றியுள்ளோம். திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க ஏராளமான பொது இடங்கள் மற்றும் விடுதிகளிலும் மினரல் வாட்டர் டேங்க் அமைக்கப்பட்டுள்ளது. எனவே அந்த குடிநீரை அனைவரும் தாராளமாக பயன்படுத்தலாம்.இவ்வாறு விஜயலட்சுமி தெரிவித்தார்.