Pages

Monday, October 4, 2010

யானைகளின் அணிவகுப்பு

விழாக்களில் யானைகளின் அணிவகுப்பு பணம் படைத்தவர்களுக்கு பெருமை அளிக்கிறது மந்திரி பினோய் விஸ்வம் பேச்சு

திருவனந்தபுரம், அக்.4-
http://dailythanthi.com/article.asp?NewsID=598306&disdate=10/4/2010&advt=2

பணம் படைத்தவர்கள் பெருமை தேடிக் கொள்வ தற்காகவே விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் யானைகளை பயன் படுத்திக் கொள்கிறார்கள் என்று மந்திரி பினோய் விஸ்வம் தெரிவித்தார்.

வனவிலங்கு பாதுகாப்பு வார விழா திருவனந்தபுரம் எஸ்.எம்.பி. அரசு மாடல் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. விழாவை தொடங்கி வைத்து கேரள வனத்துறை மந்திரி பினோய் விஸ்வம் பேசினர். அப்போது அவர் கூறிய தாவது:-

யானைகள் பாதுகாப்பு

யானைகள் பராமரிப்பு சட்டங்கள் இயற்றப்பட்ட தின் மூலம், யானைகள் துன்புறுத்தப்படுவதில் இருந்து பாதுகாக்கப்பட்டு உள்ளது.அனைத்து மத நம்பிக்கை யையும் பேணிக்காத்து மதிப் பது அரசின் கடமையாகும். ஆனால், மத நம்பிக்கை என்ற பெயரில் யானைகள் துன் புறுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது.

பணம் படைத்தவர்கள்

பணம் படைத்த செல்வந் தர்கள் பெருமை தேடிக் கொள்வ தற்காகவே விழாக் காலங்களிலும் மற்ற நிகழ்ச்சி களிலும் யானைகளை பயன் படுத்துகின்றனர்.இவ்வாறு பினோய் விஸ்வம் கூறினார்.

விழாவுக்கு சுகத குமாரி தலைமை தாங்கினார். முதன்மை வன கன்சர்வேட்டர் டி.எ. மனோகரன், தலைமை வனவிலங்கு காப்பாளர் என்.வி. திருவேதி பாபு, இ.குஞ்சுகிருஷ்ணன் மற்றும் பலர் உரையாற்றினார்கள்.