Pages

Wednesday, October 6, 2010

புலிக்குட்டியை தத்தெடுத்தார் நடிகர் கார்த்தி!

சென்னை : வண்டலூர் வன காப்பத்தில் உள்ள வெள்ளைப்புலியை நடிகர் கார்த்தி தத்தெடுத்தார்.

செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 5, 2010, 17:26[IST
http://thatstamil.oneindia.in/movies/heroes/2010/10/05-tamil-actor-karthi-adopts-white-tiger.html

அக்டோபர் 2ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை வன உயிரினங்களின் பாதுகாப்பு  வாரமாக ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி மத்திய மாநில அரசுகள் மக்களிடம் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் சென்னை  வண்டலூர் வன உயிரியல் பூங்காவுக்குச் சென்ற நடிகர் கார்த்தி, அங்குள்ள வெள்ளைப்புலி ஒன்றை தத்தெடுத்தார். மூன்று குட்டிகளை ஏற்கனவே ஈன்ற தாய்புலியான நர்மதாவுக்கான ஆறு மாத செலவையும் ஏற்றார்.இதற்கான காசோலையை வண்டலூர் வன உயிரியல் பூங்கா அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "வன விலங்குகளை பாதுகாப்பது குறித்து ஒரு மாரத்தான் ஓட்டம் நடத்தினார்கள். அதற்கு நான் சென்றிருந்தேன். அங்கு வன உயிரியிலில் உள்ள விலங்குகளை தத்தெடுப்பதாக கூறினார்கள். அதற்கான செலவை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தனர். அவர்கள் சொன்ன உடனே நான் ஒரு புலியை தத்தெடுத்துக்கொள்வதாக கூறினேன். அதன்படி புலிக்குட்டி ஒன்றை தத்தெடுத்துள்ளேன். அதற்கான 6 மாத செலவுக்கான காசோலையை, வண்டலூர் வன உயிரியல் பூங்கா அதிகாரிகளிடம் வழங்கி உள்ளேன்..." என்றார்.