Tuesday, February 28, 2012

நாய் இறந்த சோகத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்


பதிவு செய்த நாள் : பிப்ரவரி 28,2012,23:10 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=415732

வேலூர் : வேலூர் அருகே நாய் இறந்த சோகத்தில், திருமணத்தை மணப்பெண் நிறுத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.வேலூர் அடுத்த தக்கோலம் அருகே, அரிகலபாடி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி நாராயண மூர்த்தி. இவரின் மகள் காயத்ரி,24. பி.ஏ., பட்டதாரியான இவருக்கும், சென்னையை சேர்ந்த மணிவண்ணன் மகன் தரணி,26,க்கும், கடந்த மாதம் 10ம் தேதி, திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இருவரும் கலப்பு திருமணம் செய்து கொள்வதால், மிகவும் எளிமையாக காயத்ரி வீட்டில், திருமணம் செய்ய முடிவு செய்தனர். இவர்கள் திருமணம், நேற்று (பிப்., 28 ) காலை, 10 மணிக்கு நடப்பதாக இருந்தது.இதற்காக, உறவினர்கள் காயத்ரி வீட்டுக்கு வந்திருந்தனர். காயத்ரி செல்லமாக வளர்த்து வந்த மணி என்ற நாய்க்கு, நேற்று முன்தினம் இரவு, திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது.அரக்கோணத்தில் இருந்து கால்நடை மருத்துவர் பாலசுப்பிரமணியம், நாய்க்கு சிகிச்சை அளித்தார். மூன்று மணி நேரத்துக்கு பின், நாய் பழையபடி நடமாடும் எனக் கூறி விட்டு, மருத்துவர் சென்றார்.

அதனால், நேற்று திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. காலை, 9 மணிக்கு திடீரென நாய்க்கு, மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சிறிது நேரத்தில் இறந்தது. சோகம் தாங்காமல் காயத்ரி அழுது துடித்தார்.இதனால், குறிப்பிட்ட நேரத்தில் திருமணத்தை நடத்த முடியவில்லை. நாயை ஒரு அறையில் வைத்து விட்டு திருமணம் நடத்தலாம் என்றும், திருமணம் முடிந்த பின், அடக்கம் செய்யலாம் என்றும், காயத்ரி வீட்டார், யோசனை தெரிவித்தனர்.இதற்கு, காயத்ரி சம்மதிக்கவில்லை.

""நான் பல ஆண்டுகள் செல்லமாக வளர்த்த நாய் மணியே இறந்துவிட்டது. இதனால், என் சந்தோஷம் அனைத்தும் போய்விட்டது. எனக்கு திருமண வாழ்க்கை தேவையில்லை'' எனக் கூறிவிட்டார். இரு தரப்பு உறவினர்கள் சமாதானம் செய்தும், காயத்ரி திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை.இதனால், மணமகன் வீட்டார் சோகத்துடன் திரும்பிச் சென்றனர். இறந்த நாய், அங்குள்ள சுடுகாட்டில், மதியம் 3 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது.

Saturday, February 25, 2012

Slow down, save lives


Slow down, save lives


http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/article2930082.ece
February 25, 2012


Going by the number of hit-and-run accidents involving animals that we see every day, it might appear that most vehicle drivers do not consider the lives of animals precious. On our roads, we regularly see three-legged dogs, one-eyed dogs, kittens and puppies with permanent pelvic damage and cows and bulls with broken hips. This is because of the increasing number of vehicles on the road and the fact that many of us do not think about sparing a moment to bend down and check whether an animal is lying down under a vehicle or not.


When we reverse a vehicle, do we take care to check if there's an animal sleeping behind it? And we almost never bother to slow down when an animal is crossing the road. A common response to this situation is “they will run away when they hear the sound of the vehicle”. The truth is their legs are no match for our vehicle's speeds. It's important to remember that the animal might already be injured or might be unwell, making it impossible for it to get up and run away from a dangerous situation. Older animals might have poor hearing and cannot hear the sounds of vehicles in time and will therefore not be able to react with quick reflexes. With more and more skyscrapers, sources of natural shade are often non-existent in cities. Homeless animals have no choice but to take refuge under vehicles for temporary shade. If we aren't careful, their short-lived sense of relief will be followed by a painful death.


We exist in a world where there are often no caretakers of injured animals. People who spend even a few hundreds to nurse injured animals back to health are a rarity. Therefore, we must do our best not to injure them in the first place. Spare just a fraction of a moment to check for resting animals under vehicles or while reversing, and press the brakes or slow down when an animal is crossing the road.


Write to info@voiceforanimals.info to receive an email with some specially designed, printable car stickers that spread the message of compassionate driving.


(For further details, email to metropetpassion@gmail.com with your city and number)


JANNET PRABHA

Tuesday, February 14, 2012

ஜல்லிக்கட்டு நடத்த ஐகோர்ட்கிளை அனுமதி


பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2012,03:29 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=406711

மதுரை:திண்டுக்கல் மாவட்டம் தவசிமேடையை சேர்ந்த ஜேசுராஜ் மதுரைஐ கோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: காளைகளை சாகச காட்சி விலங்குகளாக பயன்படுத்த தடை விதித்து, மத்திய அரசு 2011 ல் ஒரு அறிவிப்பு வெளியிட்டது. இதை ரத்து செய்யவும், திருவிழாவையொட்டி தவசிமேடையில் பிப்.,19 ல் ஜல்லிக்கட்டு நடத்தவும் அனுமதிக்க உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனு நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன், ஆர்.கருப்பையா கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் காமேஸ்வரன், அரசு தரப்பில் சிறப்பு பிளீடர் எம்.கோவிந்தன் ஆஜராயினர். நீதிபதிகள்," ஏற்கனவே விதிக்கப்பட்ட நிபந்தனைகள்படி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கப்படுகிறது, என இடைக்கால உத்தரவிட்டனர்.

Sunday, February 5, 2012

இறைச்சி கடைகள் நாளை விடுமுறை


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=400305
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2012,01:20 IST

சென்னை :வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு, நாளை இறைச்சி கடைகளை மூட வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.வள்ளலார் நினைவு தினம் நாளை (பிப்.7) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, ஆடு, மாடு மற்றும் இதர இறைச்சி விற்பனையாளர்கள் கடைகளை மூட வேண்டும். இதற்கு வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, February 1, 2012

வால்பாறையில் சிக்கியது சிறுத்தை


பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2012,07:12 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=397937

வால்பாறை: வால்பாறை பகுதியி்ல மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை ஒன்று வனத்துறையினர் வைத்திருந்த கூண்டிற்குள் சிக்கியது. வால்பாறை டவுன் பகுதியி்ல் கடந்த சில தினங்களாக ஆடு, கோழி போன்றவற்றை சிறுத்தை அடித்து கொன்று தின்று வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருந்து வந்தனர். இதனையடுத்து சிறுத்தைய‌ை பிடிப்பதற்காக வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கூண்டிற்குள் வைக்கப்பட்டிருந்த உணவை தேடி வந்த சிறுத்தை சிக்கியது. இதனால் இப்பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

ஈரோட்டில் ஒரே மாதத்தில் 6 யானைகள் பலி-காரணங்கள் பல!


வியாழக்கிழமை, பிப்ரவரி 2, 2012, 8:57 [IST]
http://tamil.oneindia.in/news/2012/02/02/tamilnadu-6-elephants-die-a-month-erode-aid0176.html

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 6 யானைகள் பல்வேறு காரணங்களால் பலியாகி்யுள்ளது.

ஈரோடு மற்றும் சத்தியமங்கலம் வனப்பகுதிகளில் 1,200 யானைகள் உள்ளன. இந்நிலையில் சென்னம்பட்டி வனச்சரகத்தில் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானையும் அதன் குட்டியும் இறந்தன. அந்த யானைகளுக்கு நோய்த்தடுப்பு சக்தி மிகவும் குறைந்ததால் தான் அவை இறந்தன என்று கூறப்படுகின்றது.

தொடர்ந்து கொத்தமங்கலம் வாட்டமலைப் பகுதியில் மிகவும் அழுகிய நிலையில் ஒரு யானையின் உடலை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இந்த யானை புலி அல்லது சிறுத்தை தாக்கி இறந்திருக்கலாம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அந்தியூர் வனப்பகுதியில் குடல் புழு தாக்குதல் காரணமாக ஒரு யானை பலியாகியுள்ளது.

தொடர்ந்து கடந்த 27ம் தேதி தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற யானையின் மீது பேருந்து மோதியதால் அது பலியானது. இது தவிர தலமலை வனப்பகுதியில் இரண்டு யானைகள் மோதியதில் ஒரு யானை பலியானது. ஒரே மாதத்தில் 6 யானைகள் அடுத்தடுத்து பலியாகியுள்ளது அதிர்ச்சி அளித்துள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் ஈரோடு மாவட்டத்தில் 23 யானைகள் உயிரிழந்தன. இது முந்தைய ஆண்டுகளை விட அதிகமானதாகும் என்று விலங்கின ஆர்வலர்கள் கவலை
தெரிவித்துள்ளனர்.