Pages

Thursday, October 14, 2010

பாம்புகளை கொல்ல விஷ எலிகள் வீச்சு

அமெரிக்காவில் பாம்புகளை கொல்ல விஷ எலிகள் வீச்சு : விஞ்ஞானிகள் நூதன திட்டம்

பதிவு செய்த நாள் 10/14/2010 7:14:02 AM
http://dinakaran.com/sciencedetail.aspx?id=17939&id1=21

அமெரிக்காவில் பசிபிக் கடலில் உள்ள குவாம் தீவில் விஷ பாம்புகள் அதிக அளவில் உள்ளன. இவை அங்குள்ள வனப்பகுதியில் மரங்களில் சர்வ சாதாரண மாக உலா வருகின்றன. மக்களின் உயிருக்கு அச்சுறுத் தலாக அவை திகழ்கின்றன. அவை ராணுவத்துக்கு அனுப்பப்பட்ட சரக்கு வாகனங்களில் ஊடுருவி வந்துள்ளன. இதனால் கடந்த 1980-ம் ஆண்டு முதல் பாம்புகளின் தீராத தொல்லை இங்கு அதிகரித்துள்ளது.

எனவே அங்குள்ள விஷ பாம்புகளை கொல்ல அமெரிக்க வேளாண் விஞ்ஞானிகள் நூதன திட்டத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். எலி என்றால் பாம்புகளுக்கு கொள்ளை பிரியம். அவற்றை விழுங்கி உணவாக்கி கொள்ளும். எனவே எலிகளின் உடலில் “அசிடோமினாபென்” என்ற விஷ மருந்தை செலுத்தி காட்டுக்குள் உலவ விட்டால் அவற்றை சாப்பிடும் பாம்பு களை செத்து மடியும் என்று கருதினர். அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். கடந்த மாதம் குவாம் தீவில் உள்ள 20 ஏக்கர் வனப்பகுதியில் 200 எலிகளை ஹெலிகாப்டர் மூலம் வீசினர். இதில் நல்ல பலன் கிடைத்துள்ளது. எனவே இதே திட்டத்தை பெருமளவில் செயல்படுத்த உள்ளனர். ஹெலிகாப்டர் மூலம் அட்டைப் பெட்டிக்குள் அடைக்கப்பட்ட விஷ எலிகள் வீசப்பட உள்ளன. இதன் மூலம் அங்குள்ள விஷ பாம்புகளின் எண் ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.