Pages

Friday, October 29, 2010

மின்சார வேலியில் சிக்கி காட்டு யானை சாவு

கோவை அருகே பரிதாபம்: மின்சார வேலியில் சிக்கி காட்டு யானை சாவு

கோவை, அக்.29-

மின்சார வேலியில் சிக்கி 35 வயது மதிக்கத்தக்க காட்டு யானை ஒன்று பரிதாபமாக செத்தது.

மின்சார வேலியில் சிக்கி சாவு

கோவையை அடுத்த ஆலாந்துறை சாடிவயல் பகுதியில் தனியாருக்கு சொந்தமாக 20 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை சுற்றிலும் மின்சார வேலி போடப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் இரவு ஒரு காட்டு யானை அந்த பகுதியில் சுற்றி விட்டு அதிகாலை மின்சார வேலியை கடக்க முயன்றது. அப்போது அந்த வேலியில் யானை சிக்கிக்கொண்டது. வேலியில் சூரிய ஒளி மின்சாரத்துக்கு பதில் நேரடியாக மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டிருந்ததால் மின்சாரம் தாக்கி யானை அந்த இடத்திலேயே பரிதாபமாக செத்தது. இறந்து போன ஆண் காட்டு யானைக்கு சுமார் 35 வயது இருக்கும்.

உடல் எரிப்பு

காட்டு யானையின் பிரேத பரிசோதனை நடத்துவதற்காக கால்நடை மருத்துவர் மனோகரன் அங்கு சென்று யானையின் உடல்களை வெட்டி பரிசோதனை நடத்தினார். யானையின் தந்தம் தனியாக வெட்டி எடுக்கப்பட்டது.

சட்டத்துக்கு விரோதமாக வேலியில் மின்சார இணைப்பு கொடுத்து யானையின் சாவுக்கு காரணமான நிலத்தின் உரிமையாளர், மற்றும் நில மேலாளர் உள்பட 4 பேர் மீது வனத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.