Pages

Tuesday, June 28, 2022

 



விலங்குகள் நலன் என்ற பெயரில் பெருகி வரும் மோசடி NGO - க்கள்.


L.No: L320F89
28.06.2022
சென்னை
Chairman.awftp@gmail.com
Mob: 9 486 486 486

தற்போதைய Digital யுகத்தில் புதுப்புது விதமாக மோசடிகள் அரங்கேறி வருவது அனைவரும் அறிந்ததே.

Animal rescue, Animal ambulance, Animal shelter, Short term kennels, 5km தூரம் வரை  24 மணி நேர இலவச விலங்குகள்  ஆம்புலன்ஸ், Dog boarding, தினமும் 500 முதல் 2000 தெரு நாய்களுக்கு உணவு  அளிக்கின்றோம், என பலப்பல புது வடிவங்களில் வசூல் செய்யப்படும் NGO -க்கள் மற்றும் தனி நபர்கள்.

இப்படிப்பட்ட மோசடிப் பேர்வழிகள் Crowdfunding இணையதளங்கள் வாயிலாக பல லட்சங்கள் முதல், கோடிகள் வரை வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் தாங்கள் செய்யும் வசூலின் ஒரு சிறு தொகையை விலங்குகளுக்கு உதவி செய்வது போல் செய்து விட்டு மிகப் பெரும் பணத்தை ஏப்பமிட்டு வருகின்றனர்.

சென்னையை பொறுத்தவரை சுமார் 50 க்கும் மேற்பட்ட NGO -க்கள் விலங்குகள் நலனுக்காக செயல்பட்டு வருகின்றன. ஆனால் சில NGO -க்கள் விலங்குகள் நலன் என்ற போர்வையில் மிகப்பெரும் வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு குறிப்பிட்ட Crowdfunding இணையத்தில்  இவர்களுக்கு தேவையான தொகை வசூல் ஆனவுடன் வேறு ஒரு Crowdfunding இணையத்தில் ஒரு புது கதையுடன் மீண்டும் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு  போதிய வசூல் செய்துவிட்டு அதன் பிறகு விலங்குகளின் உதவிக்கு இவர்களைத் தொடர்பு கொண்டால் சரியாக பதில் கூறாததுடன் அழைப்பையும் துண்டித்து விடுகிறார்கள். சிலர் நாங்கள் இப்பொழுது எங்களுடைய  நிறுவனத்தை மூடி விட்டோம்  என்றும் கூறுகிறார்கள்.

சில NGO -க்கள் அனுமதி இன்றி வன விலங்குகளை காப்பாற்றுகிறோம் என்ற போர்வையில் அவற்றைப் பிடித்து துன்புறுத்தி புகைப்படம் மற்றும் வீடியோக்கள்  எடுத்து அதன்  வாயிலாக தங்களை  சுய விளம்பரப்படுத்தி அதன் மூலமும் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சிலர் Dog boarding  என்ற பெயரில் தினமும் 200 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை நாய்களை பாதுகாக்க வசூலிக்கிறார்கள். ஆனால் இவர்கள் எந்தவிதமான பாதுகாப்பும் போதிய உணவும் தராமல் சிறு சிறு கூண்டுகளில்  அடைத்து  வைத்து  கொடுமைப்  படுத்துகிறார்கள்.

இவ்வாறு போதிய வசதிகள் இன்றி அடைத்து வைப்பதால் சில நாய்கள் இறப்பதும்,  சில நாய்கள் காயங்களுடன் தப்பி  ஓடுவது  போன்ற நிகழ்வுகளும் நடந்துள்ளன.

விலங்குகள் நல கூட்டமைப்பு இதை  வன்மையாக கண்டிப்பதுடன் இந்தப் போலிகள் குறித்த  முழு விவரங்களையும்  அரசின் பார்வைக்கு கொண்டு செல்லவும் தயாராக உள்ளோம்.

இம் மோசடிப்  பேர்வழிகள் இத்துடன்  நிறுத்திக்  கொள்ளாவிட்டால் இதுகுறித்த ஆதாரங்களுடன் வழக்கு தொடரப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

விலங்குகள் நல ஆர்வலர்கள் இதுபோன்ற மோசடி NGO -க்கள் மற்றும் Dog boarding -களை அடையாளம் கண்டு அவர்களைப் புறக்கணிக்க வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இப்போலி நிறுவனங்கள் குறித்து தகவல் தர மேலே உள்ள Email/Mobile -யை தொடர்பு கொள்ளலாம்.

 

விலங்குகளின் நலன் மற்றும் உரிமைகளுக்காக,

தலைவர் ‍- ஜெரால்டு / துணைத் தலைவர் ‍- அண்ணாதுரை

விலங்குகள் நல கூட்டமைப்பு ‍ தமிழ் நாடு‍-புதுச்சேரி